Tuesday, August 2, 2011

போர்விமானம் வீழ்ந்து நொறுங்கியது, விமானி பலி.

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில், பிகானிர் நகரில் இருந்து 15 கி.மீட்டர் தூரத்தில் ஒரு விமான நிலையம் உள்ளது. அதன் அருகில் விமானப்படை தளமும் உள்ளது. இந்த விமானப்படை தளத்தில் இருந்து இன்று மிக்-21 ரக போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது.

பயிற்சி முடித்து விட்டு விமானம் தரையிறங்கியபோது திடீரென்று விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்தபோது விமானி பாராசூட் மூலம் கீழே குதித்து உள்ளார். ஆனாலும் பாராசூட் குடை சரியாக விரியாமல் போனதால் அவர் கீழே விழுந்து பலியாகி விட்டார். விபத்து குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com