தமிழக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை-இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ளார்
இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்கு இதனூடாக எதிர்பார்க்கப்படுவதாக இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் குறிப்பிடுகின்றார். இருதரப்பு பேச்சுவார்த்தைக்கைகான திகதி விரைவில் தீர்மானிக்ப்பட உள்ளதாக அவர் மேலும் கூறினார். பெரும்பாலும் இந்த சந்திப்பு தமிழ்நாட்டில் இடம்பெறலாம் எனவும் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment