மைத்ரி குணரத்ன ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்- நீதிமன்றம் தீர்ப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தெரிவை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவுக்கு எதிரான அடிப்படை எதிர்ப்பை நீக்கி அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் இன்று தீர்மானித்ததுஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகான சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான மைத்திரி குணரத்னவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனுவுக்கு எதிராக கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோரினால் அடிப்படை எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது.
கட்சியின் யாப்பினை மீறி, செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக முறையிட்டு ஐக்கிய தேசியக்கட்சியின் அங்கத்தவரான மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரத்ன நுகேகொட மாவட்ட நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்
முறைப்பாட்டாளரான மைத்ரி குணரத்ன ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரல்லாத காரணத்தினால், அவருக்கு வழக்கு தொடரும் சட்ட ரீதியான உரிமை காணப்படவில்லை என்று மனுவுக்கு எதிரான அடிப்படை எதிர்ப்பு முன் வைக்கப்பட்டிருந்தது. அடிப்படை எதிர்ப்பு குறித்து இருதரப்பு வாதங்களின் பிரகாரம் நுகேகொட மாவட்ட நீதவான் சம்பா ஜானகி ராஜரத்ன இந்த தீர்மானத்தை மேற்கொண்டார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்மானம் மூலம் முறைப்பாட்டாளரான மைத்ரி குணரத்னவுக்கு, வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான தடை நீங்கியுள்ளது. அத்துடன் மைத்ரி குணரத்ன, ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவராகும் என்றும் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
0 comments :
Post a Comment