Thursday, July 21, 2011

பொட்டு வைக்கும் பூசாரியாருக்கு ‘புலிகள்’ வந்து பொட்டு வைப்பார்களா? கி.பாஸ்கரன்


நீங்க நல்லா இருப்பீங்கள் ஐயா!
உங்கள் பிள்ளைகளும் நல்லா இருப்பாங்கள் ஐயா!
பயங்கரவாதிகளை அழித்தொழித்த உங்களுக்கு
பகவான் அருள் புரிந்து நீங்கள் பல்லாண்டு வாழுவேண்டுமையா!

ஐனாதிபதி : ஐயா நீங்கள் எப்படியிருகிறீர்கள்? உங்கள் வாழ்கை எப்படி போகிறது? குடும்பம் பிள்ளைகள் சுகமாக இருக்கிறார்களா?

ஐயர்: நாங்கள் இப்ப மிகவும் நல்லாக இருக்கிறோமையா, வாழ்கையும் நல்லா ஓடுதையா. இப்பதானையா நாங்கள் நிம்மதியாக தொழில் செய்கிறோம். முந்தியெண்டால் குண்டும், கொலையும், நாடே பிணக்காடாய் தான் காட்சியளிக்குமையா. இப்ப நாட்டில பிணம் விழுவதில்லை ஐயா. இப்ப நாட்டில இப்ப நல்ல காரியங்கள் நடக்குதையா. நீங்கள் அந்த நரகாசுரனை அழித்தமைக்கு ஆண்டவன் உங்களுக்கு எல்லாவிதமான ஆசியும் வழங்குவார் ஐயா.

ஐனாதிபதி: நன்றி ஐயா

ஐனாதிபதி: ஐயா , நீங்கள் இப்ப பயமில்லாமல் வாழுகிறீர்கள் தானே?

ஐயர்: ஐயோ, உங்கள் புன்னியத்தால் இங்கு இப்போ நாங்கள் யாருக்கும் பயப்பிடுவதில்லை. அந்த நாசமாய் போனவன் உயிருடன் இப்ப இருந்திருந்தால், நான் உங்களுக்கு ‘பொட்டு’ வைத்து விட்டு வீட்டுக்கு போய் நிம்மதியா உயிருடன் இருந்திருபேனா?

பொட்டம்மன் அந்த பொல்லாதவன் எனக்கு பொட்டு வைத்திருபானே? அவங்களை நீங்கள் பூண்டோடு அழித்ததற்கு உங்களுக்கு கோடி புன்னியம் கிடைக்குமையா. யாரைதான் அந்த நாய்கள் நிம்மதியாக இருக்க விட்டவங்கள். வாகரை பிரதேசத்தில் வைத்து உங்களுக்கு ‘பொட்டு’ வைத்த எங்கட சகோதரத்துக்கு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும் தானே?

வாகரை பிரதேசத்தில் வைத்து புலிகளால் சுட்டுகொல்லப்பட்ட குருக்கள்

ஐனாதிபதி: ஆமா, அவரை நான் மறப்பேனா. நீங்கள் எனிமேல் யாருக்கும் பயப்பிட வேண்டியதில்லை நான் உங்கள் நண்பன், நான் உங்கள் சகோதரன், பயங்கரவாதிகளிடமிருந்து நான் உங்களை காப்பாற்றிவிட்டேன். பயங்கரவாதிகளுக்கு எனிமேல் நமது நாட்டில் இனிமேல் இடமில்லை. நாம் அனைவரும் இந்நாட்டு மக்கள், நாம் ஒன்றாய் வாழ்வோம். ஒன்றாய் செயற்படுவோம்.

ஐனாதிபதி : கோயில்கள் எல்லாம் எப்படி நடக்குதையா?

ஐயர்: யுத்தம் முடிவடைந்த இருவருடங்களாக திருவிழாக்கள் எல்லாம் சீரும், சிறப்புமாக நடக்கிறதையா. வெளிநாட்டுக்காரர்கள் வந்து குவியிறான்கள் ஐயா, நல்லூர் தொடங்கி நயினாதீவுவரை நல்ல விதமாக போகுதையா. போக்குவரத்துக்கு ஈசியாக நடக்குதையா.

ஐனாதிபதி : வெளிநாட்டுக்காரர்கள் நியைப்பேர் கோயிலுக்கு வந்தால் உங்களுக்கு நல்ல காசு தருவாங்களே தானே? (சிரித்துக் கொண்டு கேட்கிறார்)

ஐயர்: அய்யோ அதேயேன் பேசுவான் ஐயா, அவங்கள் கமராவுடன் வறாங்கள் கோயிலை படமெடுக்கிறாங்கள், சாமி கும்பிடுகிறாங்கள் பேசாமல் போயிறாங்கள். நீங்கள் கூறியது போல் எங்களுக்கும் சரி, இங்குள்ள கஸ்ரப்பட்ட சனத்துக்கும் சரி ஒரு டொலர் கூட கொடுப்பதில்லை. கோபுரம் கட்டவேண்டுமென்றால் காசு தருவாங்கள்.

ஐனாதிபதி : சரி. வெற்றிலை சின்னத்துக்கு வாக்கு போட்டுங்கள் எங்களை வெற்றியாக்குங்கள் என்ன!

ஐயர்: ஐயர் ஓம் என தலையாட்டி சிரித்துக்கொண்டு, தான் வைத்திருக்கும் வெற்றிலைய தட்டை ஐனாதிபதியிடம் நீட்டுகிறார். (முதலில் நீங்கள் இதில் போடுங்கள் என மனசுக்குள் ஐயர் பேசுகிறார்)

கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்திற்கு நேற்று ஜனாதிபதி விஐயம் செய்த போது பொட்டு வைக்கும் ஐயர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com