ஜெயவர்த்தன அதிரடி சதம் - இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 69 ரன்களால் வெற்றி பெற்றுள்ளது முதலாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்திருந்த நிலையில், இன்றைய போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக மஹெல ஜெயவர்த்தன, டில்ஷான் ஆகியோர் களமிறங்கினர்.
டில்ஷான் 9 ரன்களுக்குள் ஆட்டமிழந்த போதும், மஹெல ஜெயவர்த்தன அதிரடியாக 14 பவுன்றிகளுடன் 144 ரன்களை எடுத்தார்.
அவருடன் இனைந்த குமார் சங்ககார 69 ஓட்டங்களையும் அடுத்து களமிறங்கிய மெத்திவ்ஸ் 46 ஓட்டங்களை எடுத்தனர். இறுதியில் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 309 ஓட்டங்களள எடுத்தது இலங்கை அணி. பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் 240 ரன்களை மாத்திரமே எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
அதிக பட்சமாக மோர்கன் 52 ஓட்டங்களையும், கேப்டன் அண்டிருவ் கூக் 48 ஓட்டங்களையும் எடுத்தனர். இலங்கைய்ன் பந்துவீச்சில் ரந்திவ், மற்றும் லக்மல் தலா மூன்று விக்கெட்டுக்களையும் மெண்டிஸ் 2 விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.
போட்டிநாயகனாக ஜெயவர்த்தன தெரிவானார்.
0 comments :
Post a Comment