ராஜனாமா தொடர்பாக விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்குவேன். IGP
இலங்கை பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய எதிர்வரும் 18ம் திகதி எற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் விசேட அறிக்கை ஒண்றை வெளியிட்டு தனது ராஜனாமா தொடர்பாக விளக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மகிந்த பாலசூரிய மருத்துவ மனை ஒண்றுக்கு தனது தனிபட்ட விடயமாக சென்றபோது எடுத்துக்கொண்ட பத்திரிகைக்கான பேட்டி ஒண்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18ம் திகதி அவருடைய பணி ஓய்வு சட்டபடி வருகின்றபோதும் கட்டுநாயக்க சூட்டு சம்பவத்தை தொடர்ந்து அதிரடியாக பதவி விலகி இரந்தார். இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான ஊடாக நிலையம் இது தொடர்பாக தெரிவித்துள்ள அறிக்கையில் பொலிஸ் மா அதிபர் தனது சக பொலிசார் செய்த தவறுக்காக பதவி விலகியதை சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் இலங்கை சரித்திரத்தில் முதலாவது பொது சேவையாளனான பொலிஸ் மா அதிபர் தானக பதவி விலகியுள்ளார் எனவும் சுட்டிக்காட்டி உள்ளது.
0 comments :
Post a Comment