யுத்தத்திற்கு ஐ.நா அறைகூவல் விடுக்கின்றதாம்.
ஐக்கிய நாடுகள் சபை யுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் நிறுவனமாக மாறியுள்ளதாக தேசிய சமாதானத்துக்கான சர்வமத அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அமைப்பின் தலைவர் கும்புருகமகே வஜ்ர தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய சர்வமத அமைப்பின் இணைத் தலைவர் சரத் எட்டிஆராய்சி, முஸ்லிம் நாடுகள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டார்.
ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் இடம்பெற்ற யுத்தங்களுடன் இலங்கையின் நிலவரத்தை ஒப்பிட்டு பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் எதிர்வரும் காலத்தில் அந்த நாடுகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் போல, இலங்கை மீதும் குற்றங்கள் சுமத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் மக்கள் எச்சிரிக்கையுடன் நடக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
...............................
0 comments :
Post a Comment