தடுத்துவைத்துள்ளோரை விடுவிக்ககோரி நாம் இலங்கையர் அமைப்பு கிளிநொச்சியில் ஆர்பாட்டம்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை கண்டுபிடித்துத் தருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நாம் இலங்கையர் என்ற அமைப்பு இன்று கிளிநொச்சியில் ஆர்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆர்பாட்டத்தை நடத்தவிடாது தடுப்பதற்கென ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்த தமது அமைப்பின் இரு தமிழ் இளைஞர்களை இராணுவத்தினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக நாம் இலங்கையர் அமைப்பின் தலைவர் உதுல் பிரேமரட்ன ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
"கிளிநொச்சி நகர மத்தியில் நாம் ஆர்பாட்டம் செய்ய ஏற்பாடுகளை மேற்கொண்டோம். ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்த நாம் இலங்கையர் அமைப்பின் தமிழ் இளைஞர்கள் இருவரை இராணுவத்தினர் சட்டவிரோதமாக கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
அத்துடன் நாம் ஆர்பாட்டத்திற்கென அழைத்திருந்த தமிழ் தாய்மார் மற்றும் சிலரை பஸ்ஸில் ஏற்றி ஆர்பாட்டத்தை தடுக்க இராணுவத்தினர் முயற்சித்தனர்.
கிளிநொச்சியில் முழுமையான இராணுவ ஆட்சி நிலவுவதாகவும் இங்கு ஆர்பாட்டம் செய்ய முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ உயர் அதிகாரி எம்மிடம் கூறினார்.
இராணுவ அட்சி இல்லை. ஜனநாயகத்தை ஏற்படுத்தி சிவில் நிர்வாகம் நடைபெறுவதாக கூறப்படும் கிளிநொச்சியில் சட்டவிரோத இராணு ஆட்சியை அறிவிப்பது, ஜனநாயக உரிமைகளை மீறுவது எப்படி?
காணாமல் போனவர்களை விடுதலை செய்யவும், கைது செய்யப்பட்ட எமது இளைஞர்கள் இருவரை விடுதலை செய்யவும். அத்துடன் கிளிநொச்சி மற்றும் வடக்கு பகுதியில் இராணுவ ஆட்சியை இல்லாதொழித்து ஜனநாயகத்தையும் சிவில் ஆட்சியையும் உறுதிப்படுத்துமாறும் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம்". என்று உதுல் பிரேமரட்ன அவ்விணையத்திடம் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment