வன்னி யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட வானூர்திகள் ஐ.நா அமைதி காக்கும் படைக்கு.
வன்னி யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட எம்ஐ 24 ரக உலங்கு வானூர்திகள் மற்றும் பயணிகள் வானூர்திகள் என்பன ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைப்பிரிவிற்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை ராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் என்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இத்தகவல் தொடர்பாக ஐ.நா வின் நாளாந்த ஊடக சந்திப்பின் பின்னர் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளரிடம் நேற்று வழங்கிய செவ்வியின் பான் கீமூனின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி இவ்வாறான எந்தவொரு யோசனையும், ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் மத்திய நிலையத்திற்கு கிடைக்கவில்லையென தெரிவித்துள்ளார்:
ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளரின் கருத்து தொடர்பில் இலங்கை ராணுவப் பேச்சாளரிடம் வினவப்பட்டபோது, தமக்கு அது குறித்து எந்த கருத்தையும் உறுதியாக வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைப்பிரிவிற்கு இலங்கையிலிருந்து வானூர்திகள் வழங்கப்படும் நடவடிக்கை உண்மையானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment