ரஷ்ய விமான விபத்து 44 பேர் உயிரிழந்தனர்
ரஷ்ய தலைநகர் மாஸ் கோவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்தனர்.ரஷ் ஏர் டியூ-134 என்ற அந்த விமானம், 43 பயணிகள் மற்றும் 9 விமான பணியாளர்களுடன் மாஸ் கோவிலிருந்து கரீலியா ரிபப்ளிக் நகரின் தலைநகரான பெட்ரொஸா வோட்ஸ்க் என்னும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தது. திங்கள்கிழமை நள்ளிரவு நேர த்தில் அந்த விமானம், விமான நிலையத்திற்கு 2 கிமீ தொலைவில் உள்ள விமான நெடுஞ்சாலையில் தரையிறங்கும் போது, ஓடு பாதை யிலிருந்து விலகிச் சென்றதாக தெரிகிறது.
தரையில் மோதிய பயணிகள் விமானம் உடனடியாக தீப்பற்ற தொடங்கியதாகவும், அதன் பின் விமானம் வெடித்து சிதறியது என் றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித் தனர்.
விமானம் வெடித்து சிதறியதால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் விமானப் பாதையில் ஆங்காங்கே கிடந்தன என்று விமான நிலைய அதிகாரிகள் கூறினார்கள்.
இந்த விமான விபத்தில் அரு கில் இருந்த வீடுகள் அதிர்ஷ்ட வசமாக தப்பியது என்றும் அதி காரிகள் கூறினர். ரஷ்ய பயணிகள் விமான விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டனர். சிகிச்சைப் பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ரஷ்ய அமைச்சரகத்தை சேர்ந்த பேச்சாளர் ஐரினா ஆண்ட் ரியாநோவா கூறி யுள்ளார்.
ரஷ்யாவின் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான காரணங்கள் பற்றி விரிவான விசாரணை நடந்து வருவதாக அந்நாட்டு அறிக்கைகள் கூறுகின்றன.
விமான விபத்துக்கு தரை யிறங்கும் போது நிலவிய மோசமான வானிலை காரணமாக என்பது பற்றியும் ஆராய்ந்து வருவதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விமானம் விபத்து நடந்த பெட்ரொஸாவோட்ஸ்க் பகுதியில் அதிக அளவில் பனிமூட்டம் இருந் ததாகவும் ரஷ்யாவில் இருந்து வரும் செய்தி அறிக்கைகள் கூறின.
விபத்து நடைபெற்றதற்கு மனித தவறுகள் காரணமா என் பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. விபத்தில் உயிரிழந் தவர்களில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த பயணியும் ஒருவர் என்று கரீலியா ரிபப்ளிக் நகரின் சுகாதார அமைச்சர் வேலண்டினா உலிச் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் இருந்து தகவ ல்கள் பதிவைக் கொண்ட கறுப்பு பெட்டியை கண்டெடுத்து உள்ள தாக மீட்புக் குழுவினர் தெரிவித் துள்ளனர்.
0 comments :
Post a Comment