வட கிழக்கு அரச அதிகாரிகளுக்கு சில அமைச்சர்களால் அச்சுறுத்தலாம்.
மின்னல் றங்கா எனப்படும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜெ.ஸ்ரீரங்கா வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிவில் நிர்வாக அதிகாரிகள் அமைச்சர்களின் மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர் என பொது நிர்வாக சபைகள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவிடம் முறையிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
வடகிழக்கு பிரதேசங்களில் சிவில் நிர்வாகம் நடக்கிறது என்று கூறப்பட்டபோதும் நிர்வாக சேவை அதிகாரங்கள் உட்பட அரச அதிகாரிகள் எவரும் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலையில் இருக்கின்றனர,; பிரதேசங்களில் கடமையாற்றும் அரச அதிகாரிகள் எந்த ஒருவிடயத்தையும் சுதந்திரமாகச் செய்யமுடியவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தமுடியவில்லை. சகல விடயங்களிலும் இந்தப் பகுதிகளை ஆழ்கிறார்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு சில அமைச்சர்கள் தலையிடுகின்றனர் என றங்கா அமைச்சரிடம் முறையிட்டதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றது:
அதிகாரிகள் அமைச்சர்களின் கட்டளைப்படியே செயலாற்ற வேண்டியுள்ளது. பல நிர்வாக சேவை அதிகாரிகள் அமைச்சர்களில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினாராம்.
றங்காவின் முறைப்பாட்டினை செவிமடுத்த அமைச்சர் ஜோன் செனவிரத்தின அரச அதிபர்கள் உட்பட அனைத்து நிர்வாக சேவை அதிகாரிகளும் பொது நிர்வாக அமைச்சின் நேரடிப்பிரதிநிதிகள். உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் சுற்றறிக்கையின் படி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அவர்கள் பயன்படுத்துவதை எவரும் தடுக்க முடியாது எனவும் அவ்வாறு அமைச்சர்கள் அச்சு றுத்துவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரின் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் றந்காவிற்கு தெரிவித்துள்ளார்:
0 comments :
Post a Comment