விடுதலைப்புலி சந்தேக நபர் இந்தியாவில் கைது!
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் விடுதலைப்புலி அமைப்பை சேர்ந்த ஒருவரை கேரள மாநில உளவுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, தடை செய்யப்பட்ட விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதாக கேரள மாநில பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட உளவுத்துறையினர், ஓமான் நாட்டிற்கு சொந்தமான விமானத்தில் மஸ்கட் செல்ல முயன்ற ஜீவாதாஸ் மாரிமுத்து என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார் இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் இருந்து வருவதாகவும் பரீஸில் அரசியல் தஞ்சம் புகுவதற்காக சென்று கொண்டிருப்பதாகவும் சந்தேக நபர் தெரிவித்ததாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் அவருடைய கடவுச்சீட்டி பீட்டர் சவரிமுத்து திருச்சி தமிழ்நாடு என்று பெயர் மாறி இருந்ததால் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments :
Post a Comment