கொலை செய்து தூக்கிலிடப்பட்ட நிலையில் மாங்காட்டில் சடலம் மீட்பு
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மாங்காடு பிரதேச வெற்றிலைத் தோட்டத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை களுவாஞ்சிக்குடி பொலிஸார் இன்று (16ம் திகதி) காலை மீட்டுள்ளனர். மாங்காடு கட்டுப்பிள்ளையார் வீதியில் உள்ள வெற்றிலைத் தோட்டத்தில் வைத்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் குறித்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் எனவும், இவர் கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment