அக்கரைப்பற்றில் இரு சிறுமியர் துஷ்பிரயோகம் - சந்தேகநபர்கள் இருவர் கைது
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் 5 வயது சிறுமியொருவரும் மற்றும் 9 வயது சிறுமியொருவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புபட்ட 48 வயதுடைய கடை உரிமையாளர் ஒருவரும், 16 வயது சிறுவன் ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமுன் தினம் 9 வயது சிறுமி 48 வயதுடைய கடை உரிமையாளராலும், நேற்றைய தினம் 5 வயது சிறுமி 16 வயது சிறுவனாலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, 48 வயது நபர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் ரி.சரவணராஜா, சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சிறுவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 comments :
இவருக்கு நாய்பத்துஎட்டு வயதுல நாய்குணம் வந்திருக்கோ. என்னிடம் நல்ல பாக்குவெட்டி ஒன்று உண்டு அது கனகாலமா பயன்படுத்தவில்லை. தேவையெண்டா சொல்லுங்கோ..
Post a Comment