ஜெயலலிதா இன்று 3 வது முறையாக முதல்வராக பதவியேற்பு
திருப்பரங்குன்றம்,மே. - 16 - தமிழகத்தின் 14 வது முதல்வராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று நண்பகல் பதவியேற்கிறார். அவர் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகி உள்ளார். தமிழக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் கடந்த 13 ம் தேதி . அறிவிக்கப்பட்டன. அ.தி.மு.க கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன் அ.தி.மு.க 146 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. தமிழகத்தின் 14 வது முதலமைச்சராக ஜெயலலிதா இன்று நண்பகல் பதவியேற்க உள்ளார். அவர் மூன்றாவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமர்கிறார். 1991 ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று முதல் முறையாக ஜெயலலிதா முதல்வர் பொறுப்பேற்றார். அதனை அடுத்து 2001 ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று 2 வது முறையாக முதல்வரானார். தற்போது 2011 ல் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று மூன்றாவது முறையாக முதல்வராகிறார்.
6 வது முறை:
அ.தி.மு.க வை துவக்கிய எம்.ஜி.ஆர். 1977, 1980, 1984 ஆகிய மூன்று தேர்தல்களிலும் மகத்தான வெற்றி பெற்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தின் முதல்வராகி சாதனை படைத்தார். இதன் பின்னர் 1991, 2001 ல் அ.தி.மு.க வெற்றி பெற்று இரண்டு முறை ஜெயலலிதா முதல்வரானார். இதுவரை 5 முறை அ.தி.மு.க. முதல்வர் நாற்காலியை பிடித்துள்ளது.
தி.மு.க.வில் அண்ணா இறந்த பின்னர் 1969 மற்றும் 1972, 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் கருணாநிதி 5 முறை முதல்வரானார். தற்போது நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அவரது கட்சியினரும், நிர்வாகிகளும் கருணாநிதி இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று 6 வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார் என கூக்குரலிட்டனர். இக்கருத்தை அக்கட்சியில் புதிதாக முளைத்த காமெடி பீஸ் வடிவேலும், ஜெயா டி.வியால் வாழ்வு பெற்று பின்னர் தி.மு.கவுக்கு தாவிய மார்க்கெட் இழந்த நடிகை குஷ்புவும் கூட பிரச்சார கூட்டங்களில் கூவி வந்தனர்.
தமிழகத்தில் 6 வது முறையாக ஆட்சி அமைக்கப் போவது அ.தி.மு.கவா அல்லது, கருணாநிதியா என்ற கேள்வி மக்களிடையே பெரும் புயலை கிளப்பியது. கருணாநிதியால் கடந்த 5 ஆண்டுகள் அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்டு வந்த மக்கள் மிகப் பெரிய மவுன புரட்சியை ஏற்படுத்தி தங்களது ஓட்டுக்களை அ.தி.மு.க.வுக்கு ஒட்டுமொத்தமாக அளித்தனர். மக்கள் நிதானமாக தீர்க்கமாக அமைதியாக முடிவெடுத்து 6 வது முறையாக அ.தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் அமர்த்தியுள்ளனர். மக்களின் இந்த மகத்தான தீர்ப்பு மூலம் 6 வது முறை ஆட்சி கனவு கருணாநிதிக்கு தகர்ந்து போனது
0 comments :
Post a Comment