கனடாவில் நடந்த கொலையை சீனாவில் பார்த்த வாலிபர்
சீனாவில் பெய்ஜிங் நகரை சேர்ந்த குயான் லியு (வயது 23) என்ற மாணவி, கனடாவில் உள்ள டொராண்டோ யார்க் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். கனடாவில் இருந்தபடி, வெப் கேமரா மூலமாக சீனாவில் உள்ள தனது காதலனுடன் இணையதளத்தில் அரட்டை அடிப்பது அவருடைய வழக்கம். கடந்த வெள்ளியன்று அப்படி பேசிக் கொண்டு இருந்த போது, லியு அறைக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார்.
லியுவுடன் வாக்குவாதம் செய்த அந்த மர்ம நபர், பின்னர் அவரை கொலை செய்து விட்டார். இந்த கொலை சம்பவத்தை வெப் கேமரா மூலமாக, 11 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சீனாவில் இருந்தபடியே லியுவின் காதலனும் பார்த்துக் கொண்டிருந்தார். உடனடியாக, கனடாவில் வசிக்கும் லியு நண்பர்களை தொடர்பு கொண்டு தகவல் கூறினார். அதற்குள், மர்ம நபர் தப்பியோடி விட்டார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் கனடா போலீசார், இணையதள ஆதாரத்தை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொலையாளி 6 அடி உயரத்தில் பிரவுன் நிற தலை முடியுடன் காணப்பட்டதாக சீனாவில் உள்ள காதலன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment