ஊர்காவற்துறையில் மகளை வல்லுறவு கொண்ட தந்தை தலைமறைவு.
யாழ். ஊர்காவற்துறை நான்காம் வட்டாரத்தில் பன்னிரண்டு வயது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை தலைமறைவாகியுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது மகள் ஊர்காவற்துறை அரசினர் வைத்திய சாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மது போதையில் நேற்று இரவு வீட்டுக்கு வந்த கணவர் மனைவியுடன் பிரச்சனை பட்டு விட்டு மனைவியை வீட்டை விட்டு துரத்திவிட்டு மகளுடன் பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார்.
இதன் பின்னர் பிள்ளை தந்தையால் பாலியல் வல்லுறவுக்கு உட்படத்தப்பட்டது தாயாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தையைத் தேடி வருவதாக ஊர்காவற்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment