போர்குற்றங்கள் மீதான நடவடிக்கை : ஐ.நா விசாரணை அறிக்கை சமர்பிக்கப்படுகின்றது.
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறுகின்ற போர்க்குற்றங்கள மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் க்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்டிருந்த விசாரணைக்குழு இன்று தனது அறிக்கையை ஐ.நா விடம் கையளிக்கின்றது என இன்னசிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஜூன் மாதம் மேற்படி குழு நியமிக்கப்பட்டிருந்தபோது இக்குழு நியமனத்திற்கு எதிராக இலங்கையிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பயிருந்ததுடன் குறிப்பிட்ட குழு இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நாட்டினுள் நுழைய அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் இலங்கையின் சட்டமா அதிபர், ஐ.நா விற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வா உட்பட உயர்மட்ட இராஜதந்திரக் குழு வொன்று ஐ.நா குழு வை அமெரிக்காவில் சந்தித்து பேசியிருந்தது.
இந்நிலையில் அறிக்கை வெளியிடுவதில் இழுபறி நிலவியது. ஆனாலும் இன்று அது கையளிக்கப்படவுள்ளது.
0 comments :
Post a Comment