'வடக்கில் பதிவு இடைநிறுத்தம்'- சட்டமா அதிபர்
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிப் பிரதேசங்களில் மக்களின் விபரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையை படையினர் நிறுத்திக்கொள்வதாக சட்டமா அதிபர் உச்சநீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார். கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே அரசு சார்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர கால சட்டவிதிகள் சில நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பதிவு முறை சட்டமுரணானது என மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, தேவையான சட்டவிதிமுறைகளை தயாரிக்கும் வரை குறித்த பிரதேசங்களில் மக்கள் பதிவு முறையை நிறுத்துவதாக அரச தரப்பு சட்டத்தரணி கூறினார்.
மனுவின் பிரதிவாதிகளாக பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, யாழ்மாவட்ட கட்டளையதிகாரி மற்றும் இராணுவப் பேச்சாளர் உபய மெதவல ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
0 comments :
Post a Comment