தமிழர் அரசுடன் இணக்கப்பாட்டிற்கு செல்வதே சிறந்தது. எரிக்சொல்கைம்.
நோர்வே வெளி நாட்டு அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதருமான எரிக் சொல்கைம் நோர்வேயில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனப்படும் புலிப்பிரதிநிதிகளை சந்தித்துப்பேசியுள்ளார்.
கடந்த 18ம் திகதி எரிக் சொல்கைமின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் புலிகளின் முன்னணி அமைப்புக்கள் பலவற்றின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடன் பேசிய அமைச்சர் எரிக், இலங்கை அபிவிருத்தி, வடகிழக்குவாழ் மக்களின் வாழ்கைத்தரம், அரசியல் தீர்வு என்பவற்றில் முன்னேற்றம் ஏற்படவேண்டுமாயின் நீங்கள் அனைவரும் இலங்கை அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டுடன் பேச்சுவார்த்தைகளை நாடாத்தவேண்டும் என கடும்தொனியில் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
இச்சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் நோர்வே அரசாங்கம் இலங்கை விடயத்தில் எவ்வாறானதோர் வெளிநாட்டு கொள்கையை கடைப்பிடித்து வருகின்றது என்ற கேள்வியை கேட்டபோதே அவர் இப்பதிலினை அளித்ததாக தெரியவருகின்றது.
1 comments :
அன்று சமபலமாகவுள்ள சந்தர்ப்பத்தில் அவர் தமிழரின் நலனுக்காக புத்திமதிகளை கூறியும் புலிகள் தலைமைப்பீடம் தலைக்கனம் கூடி அவரை கணக்கில் எடுக்கவில்லை.
ஆனால் இன்றும் புரிந்துகொள்ளாத புலம்பெயர் சுயநல தமிழினம்.
Post a Comment