Thursday, March 10, 2011

சிறிதரனை கொல்லவேண்டுமாயின் குண்டு வாகனத்தினுள் பாய்திருக்க வேண்டும். விமல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், தமிழ் தேசிய கூட்டமைப்பினால் திட்டமிடப்பட்டது என, அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரை கொல்ல வேண்டும் என்பதே சூத்திரதாரிகளின் இலக்காக இருந்திருந்தால், பிரயோகிக்கப்பட்ட தோட்டாக்களில் ஒன்றேனும் வாகனத்தின் மேற்பகுதியில் பாய்ந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு அனைத்து தோட்டாக்களும் வாகனத்தின் சிலலுகளில் மாத்திரமே பாய்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் அவர்கள் இலங்கைக்கு எதிரான பிரசாரங்களை செய்வதாகவும், உள்நாட்டில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளிநாடுகளில் இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனீவாவில் மனித உரிமைகள் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இவ்வாறான ஒரு சம்பவம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் இக்கூற்றினை தெரிவிக்கு முன்னரே இலங்கைநெற் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறிப்பிட்ட நடாகத்தினை வெளிப்படுத்தியிருந்தது. மக்களுக்கு சேவை செய்து செல்வாக்கினை சம்பாதித்துக்கொள்ள முடியாத தமிழ் அரசியல்வாதிகள் இனவாதத்தை கக்குவதன் மூலம் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முனைந்து வருகின்றனர்.

தனது சதோதரனின் இணையத்தளத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக எந்நேரத்திலும் கமரா ஒன்றுடன் அலைந்து திரியும் சிறிதரன் இதுவரை தன்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஆதராமாக இதுவரை எவ்வித புகைப்படங்களையும் வெளியிடாததன் ஊடாக அமைச்சர் வீரவன்ச கூறியிருக்கும் வாகனத்தின் கீழே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் இவர்கள் இதன் மூலம் மக்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ள முனைகின்றார்கள் என்பதும் உறுதியாகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com