Saturday, March 12, 2011

புளொட் அமைப்பின் ரொறண்டோ கிளையினர் கனடாவுக்கான இலங்கை துணைத்தூதர் சந்திப்பு.

ஊடக அறிக்கை
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் கனேடிய பிரதிநிதிகளுக்கும் ரொறன்ரோ துணை தூதரகத்தின் தூதுவர் திரு.கருணாரட்னா பரணவிதாரண அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.03.2011) மாலை ரொறன்ரோவில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பில் துணை தூதரகத்தின் தூதுவர் கருணாரட்ண மற்றும் புளொட் அமைப்பின் சர்வதேச செயலகத்தின் கனேடிய பிரதிநிதிகளும், கனேடிய கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். சுமார் 3மணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு, வடகிழக்கில் மீள்குடியேற்றம், தமிழர் வதிவிடங்கள் அபகரிக்கப்படுதல் உட்பட பல விடயங்கள் புளொட் பிரதிநிதிகளால் துணை தூதுவர் கருணாரட்ண அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.


மேலும் பல சகாப்தங்களாக பெரும்பான்மையின அரசுகளினால் இழுத்தடிக்கப்பட்டு வரும் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு காணும் விடயம் தொடர்பாக விவாதிக்கையில், அவசரகால சட்டத்தினை நீடிப்பதற்கும், அதிபர் ஆட்சி காலத்தினை நீடிப்பதற்கும் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நிரூபிக்க முடியுமானால், நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந்துவரும் இனப்பிரச்சினைக்கு ஏன் அவரினால் தீர்வு காணமுடியாது என்று புளொட் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த துணை தூதுவர் கருணாரட்ண, இனப்பிரச்சினைக்கு ஒரு முறையான அரசியல் தீர்வு ஒன்றிளை ஜனாதிபதி முன்வைப்பார் என்றும், அதேவேளை இனங்களுக்கு இடையில் நல்லுறவையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்த கூடிய செயற்திட்டங்களை இரு தரப்பிலும் உள்ள அரசியல் தலைவர்கள் செயற்படுத்த வேண்டுமென தெரிவித்து இருந்தார். மேலும் தமிழ் மக்கள் கடும் துன்பங்களை கடந்து வந்துள்ளனர், அவர்களின் துன்பங்கள் படிப்படியாக துடைக்கப்படுகின்ற போது அவர்களுக்கு எம்மீது நம்பிக்கைகள் உருவாகும் எனவும் கூறியிருந்தார்.

வன்னி யுத்தத்தில் அவலங்களை இழந்த நிலையில் வவுனியா நோக்கி வந்த மக்களிற்காக கனடாவில் இருந்து உடுபிடவைகள், புத்தகங்கள், சிறுவர்களிற்கான விளையாட்டு பொருட்கள், அங்கவீனம் அடைந்தவர்களிற்காக சீனாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் புதிதாக தயாரிக்கப்பட்ட சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் உட்பட பல பொருட்கள் அடங்கிய இரு கொள்கலன்கள் எம்மால் 2009ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பொருட்களை அரசு இன்றுவரை முடக்கி வைத்துள்ளது. இந்த நிலையில் இலங்கையின் அபிவிருத்திக்கு எவ்வாறு புலம்பெயர் மக்களினால் உதவ முடியும் என்று புளொட் தூதுக்குழு கேள்வி எழுப்பதியது. இதற்கு பதிலளித்த கருணாரட்னா அதில் ஏதோ தவறு ஏற்பட்டுவிட்டது. இது குறித்து தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு அந்த உதவி பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களிற்கு வழங்கிட உதவி புரிவதாகவும் தெரிவித்தார்.


தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (சர்வதேச செயலகம);
ஊடகத்துறை இணைப்பாளர்
கே.மையூரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com