அரசு-த.தே.கூ பேச்சில் புளொட்டுக்கும் அழைப்பா? இதுவரை இல்லை என்கின்றார் தலைவர்.
அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையே இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில் புளொட், ஈபிடிபி ஆசிய அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இச்செய்தி தொடர்பாக புளொட் அமைப்பின் தலைவர் திரு சித்தார்த்தன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, இதுவரை எந்த அழைப்பும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார்.
ஊடகத்துறையில் தன்னைதானே ஜாம்பவான் எனக் கூறிக்கொண்டு காலத்திற்கு காலம் ஆட்சியிலுள்ளவர்கள் மற்றும் பலம்பொருந்திய கட்சிகளுக்கு வக்காலத்துவாங்கி அரசியல் மாமா வேலைசெய்யும் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமே பேசவேண்டுமென இரந்து வேண்டியிருந்த நிலை யில் கடந்தவாரம் ஊடவியலாளர்களுடன் பேசிய ஜனாதிபதி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக தான் புளொட், ஈபிடிபி உட்பட்ட சகல கட்சிகளுடனும் பேசுவேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment