Friday, January 7, 2011

புலிகளுக்கான வானொலி உபகரணம் ஐ.தே.க யின் வேண்டுதலின் பேரில் வழங்கப்பட்டது. Wiki

நோர்வேயிடம் ஐக்கிய தேசிய கட்சி அரசு உதவி கோரியிருந்ததாக மற்றுமொரு விக்கிலீக்‌ஸ் தகவலை ஓஸ்லோவை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அந்த விக்கிலீக்ஸ் தகவலில் ஐக்கிய அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளதாவது, நோர்வே சமாதான நடவடிக்கைகளுக்காக இலங்கையின் வேண்டுகோளை கருத்திற் கொண்டு இலங்கை சமாதான செயலாளருக்கு உபகரணங்களை வழங்க சம்மதித்தாகவும், புலிகளுக்கு நேரடியாக வழங்க சம்மதிக்கவில்லை எனவும் நோர்வே தூதுவர் தனக்கு தெரிவித்துள்ளார். ஊடகங்களில் புலிகளுக்கு நோர்வே அரசு உதவி செய்தது எனக் கூறப்படுவது தவறு எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த உபகரணம் கொழும்பு துறைமுகத்திற்கு நோர்வேயின் இறக்குமதி என்பதால் வரிகளின்றி கொண்டுவரப்பட்டு, சமாதான செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், பின்பு பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் கைமாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளுக்கு வழங்கப்பட்ட உபகரணம் சிங்கபூரில் தயாரிக்கப்பட்ட உபகரணம் எனவும், அதன் மதிப்பு 90 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com