Saturday, January 8, 2011

வீணையால் தேசியகீதம் மீட்டுவோம். பீமன்

இருக்கிறவன் ஒழுங்கா இருந்தால் செரைக்கிறவன் ஒழுங்கா செரைப்பான் என்பது டக்ளஸ் அடிக்கடி கூறும் பழமொழிகளில் ஒன்று. சுட்டு விரலை மற்றவர் மீது நீட்டும் டக்ளஸ் ஏனைய மூன்று விரல்களாலும் தன்னைக்காட்டி, நான் ஓழங்காக இருந்தால் என்தலையில் செரைக்கின்றவர்கள் மொட்டையடித்துவிட்டு செல்லாமல் பார்த்துக்கொள்ளலாம் என்பது பொருள்.

இலங்கையில் தேசியகீதம் சிங்களமொழியில் மாத்திரமே பாடப்படவேண்டும் என்ற விடயம் அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ள செய்தியை முதன்முதலில் சண்டேரைம்ஸ் ப த்திரிகை வெளியிட்டது. அச்செய்தியில் இவ்விவகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் அமைச்சரைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், இம்மாற்றம் கொண்டுவரப்படுதவற்கான காரணம் உலகில் எந்தவொரு நாட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசியகீதம் பாடப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

உலகிலே சுவிற்சர்லாந்து எனவொரு நாடுண்டு. அங்கே ஜேர்மன், பிரென்சு, இத்தாலி, ரத்தோரோமன் எனும் நான்கு மொழிகள் அரச கரும மொழிகள். இந்நான்கு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படுகின்றது. இவ்வாறன நிலை யில் ஜனாதிபதி இம்மாற்றத்தினை கொண்டுவருவதற்கு மேற்படி காரணத்தை கூறுகையில் அமைச்சரவையில் அமர்ந்திருந்த ஐந்துக்கும் மேற்பட்ட கலாநிதிகள் வாய்மூடி மௌனிகளாக இருந்தபோது, மாற்றம் ஒன்றைத்தவிர உலகில் யாவுமே மாறிவிட்டது என ஆணைக்குழு ஒன்றின் முன் சாட்சியமளித்த டக்ளஸ் எதிர்த்து பேசாமையையிட்டு இங்கிதமும் கிலேசம் கொள்ளத்தேவையில்லை. காரணம் மாற்றம் ஒன்றைத் தவிர யாவுமே மாறியுள்ளது என்ற நினைவுலகில்வாழும் டக்கிளஸ் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில தேசிய கீதம் பாடப்படும் நாடுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்து அங்கும் ஒரே மொழியிலேயே தேசியகீதம் இசைக்கப்படுகின்றது என நினைத்திருக்கலாம்.

ஆனால் இந்தியாவிலே தேசியகீதம் கிந்தி மொழியிலேயே பாடப்படுகின்றது என வீரவங்ச அவர்களால் அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டபோது, நண்பர் வீரவங்ச அவர்களே! நான் இலங்கையிலிருந்து சிறையுடைப்பில் தப்பயோடி இந்தியாவின் சூளைமேட்டுப்பிரதேசத்திலும், இந்திய சிறையிலும், அண்மையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை சந்திக்க சென்று பிடியாணை வந்துவிடும் என்ற பயத்தில் இலங்கைக்கு தப்பியோடிவரும்வரை பல இந்திய அரச நிகழ்வுகளில் பங்கெடுத்திருக்கின்றேன். அங்கு தேசிய கீதம் கிந்தி மொழியில் பாடப்படுவதில்லை அது பங்காளி மொழியில் பாடப்படுகின்றது என தெளிவுபடுத்தாமையையும் ப த்தோடு ஒன்று பதினொன்றாக மன்னிப்போம்.

இலங்கையில் தமிழ் அரசகரும மொழி. வட- கிழக்கு மாகாணங்களில் அது நிர்வாக மொழியும்கூட. வடகிழக்கிலே இடம்பெறுகின்ற அரச நிகழ்வுகளிலும் பாடசாலைகளிலும் தமிழ் மொழி தமிழில் தேசியகீதம் பாடுவதற்கு இலங்கையில் அரசியல்யாப்பு இடமளித்துள்ளது.

ஆனால் இதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைவிவகாரத்தில் எரிகிறவீட்டில் பிடுங்கியது மிச்சம் என டக்ளஸ் நடாத்தும் சித்துவிளையாட்டுக்கள் மிகவும் வருந்தத்தக்கது. இத்தடைவிவகாரம் வெளிச்சத்திற்கு வந்தபோது, பிபிசி யின் தமிழ் சேவைக்கு கருத்துதெரிவித்த டக்ளஸ், இந்தவிடயம் பேசப்பட்டதே தவிர எவ்வித முடிவுகளும் அமைச்சரவையில் எடுக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

இக்கருத்தினை தெரிவித்து சிறிது காலத்தில் யாழ்பாணத்தில் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வொன்றில் சிங்களத்திலேயே தேசியகீதத்தை பாடுவிக்க முன்னர் அது தொடர்பாக உள்ளுர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் ஜனாதிபதி , பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்வில் சிங்களத்தில் பாடுவதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்திருந்ததுடன், எதிர்காலத்தில் தமிழில் தேசியகீதம் தொடர்பாக பரிசீலிக்குமாறு அரசினை வேண்டவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிபிசி யின் தமிழ் சேவைக்கு கருத்து தெரிவிக்கையில், தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரம் பாடுவது தொடர்பாக அமைச்சரவையில் எவ்வித முடிவுகளும் எடுக்கவில்லை என தெரிவித்திருந்த டக்ளஸ் உள்ளுர் செய்தி சேவைக்கு தெரிவிக்கையில் தமிழில் பாடுவது தொடர்பாக மீள்பரிசீலினை செய்யுமாறு அரசினை வேண்டவுள்ளதாக தெரிவிக்கின்றார். அமைச்சரவையில் எவ்வித முடிவும் எடுக்கப்படாவிட்டால் எதற்காக வேண்டுகோள்???

இலங்கை அரசாங்கத்திடம் தமிழில் மீண்டும் தேசியகீதம் பாடுவது தொடர்பாக வேண்டுகோள் விடுக்கவுள்ளேன் என பாமர மக்களுக்கு ஒரு கதைசொல்லும் டக்ளஸ் அரச அதிகாரிகளுக்கு சிங்களத்தில் தேசியகீதம் பாடப்படுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கட்டளையிட்டவிடயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. யாழ்பாணத்தில் பிரதமர் கலந்துகொண்ட அந்த நிகழ்வில் தேசியகீதத்தினை சிங்களத்தில் பாடுவிக்குமாறு யாழ் அரச அதிபருக்கு டக்ளஸ் கட்டளை விடுத்ததாக அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தேசிய கீதம் பாடப்படும் மொழி விவகாரம் குறித்து இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் எனவும் தமிழில் பாடுவதில் பெரும் சிக்கல் இருப்பின் தேசிய கீதத்தை இசையால் மட்டும் இசைக்க முடியுமா என்பதை பரிசீலிக்குமாறும் மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரரான நியங்கொட விஜிதசிரி அரசிற்கு பரிந்துரைத்துள்ளார்.

இப்பரிந்துரை டக்கிளசின் காதிற்கு எட்டினால் தேரர் இசையில் தேசிய கீதத்தை இசைக்க சொல்லியிருக்கின்றார். எனவே எதிர்வரும்காலத்தில் வீணைக்கு வாக்களியுங்கள் நாம் தேசிய கீதத்தை வீணையினால் மீட்டுவோம் என தேர்தல்களில் களமிறங்குவார் என நம்புகின்றேன். VIII

2 comments :

Anonymous ,  January 9, 2011 at 11:40 PM  

Dear Tamil bros & sis
please DO NOT complient Our NP CM Doucles!
Last election he want to have his logo (veenai) in local election but Mahinda told him he has to stick with leaves (vethtila elai) otherwise he will not allow him to stat in the election infront of local paper reporters !!!
So tell me what our poor man can do !!!!

Anonymous ,  January 10, 2011 at 3:39 PM  

Not only this poor man, the other poor Tamil men should resign their useless seats in the parliament.

Even though the Government did not give respect for the national anthem in Tamil medium, how can they give respect for the Tamil members in the parliament?

It is very sad. But, it is the time for our self respect.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com