Sunday, January 9, 2011

அமெரிக்காவில் எம்.பி மீது துப்பாக்கி சூடு. 6 பேர் பலி. 12 பேர் காயம்.

அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் எம்பியான கிஃப்போர்டு கலந்து கொண்ட நிகழ்வொன்றில் அவர் படுகாயமடைந்துள்ளதுடன் 6 பேர் உயிரிழந்ததுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். புடுகாயமடைந்த எம்.பி. கேப்ரியல் கிஃப்போர்டு நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றது.

முதலில் கிஃப்போர்டு இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாயின. பின்னர் அதனை மறுத்த மருத்துவப் பேச்சாளர், கிஃப்போர்டு உயிருடன் உள்ளார். தலையில் குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. குண்டுக் காயங்களுடன் மேலும் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

ஷாப்பிங் சென்டர் ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கிஃபோர்டு கலந்துகொண்ட போதே ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அந்த இடத்திலேயே 6 பேர் கொல்லப்பட்டுள்ளளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 22 வயதுடைய ஜார்ட லீ லௌனர் எனும் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஐகது செய்யப்பட்ட அவர் மேலதிக விசாரணைகளுக்காக எப்பிஐ இனரிடம் பாரமளிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் 40 - 50 வயதுவரையான நபர் ஒருவரது புகைப்படத்தினை வெளியிட்டுள்ள பொலிஸார் அவரை கைது செய்வதற்கு பொது மக்களின் உ தவியினை நாடியுள்ளனர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com