Sunday, January 16, 2011

பியசேனவை அடித்து துரத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்.

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே பாடசாலைகளிலும் பொதுக்கட்டடங்களிலும் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலைமைகளை அரசியல்வாதிகளும், பொதுநிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் சென்று பார்வையிட்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு எனும் கிராமத்தில் தஞ்சமடைந்துள்ள மக்களை பார்வையிடச்சென்ற அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேன அம்மக்களினால் தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, முகாமிலுள்ள மக்களைப் பார்வiயிடச் சென்ற பா.உ பியசேன தான் அங்கு தங்கியுள்ள மக்களின் தேவைகளை அறிந்து செல்லவந்துள்ளதாக தெரிவித்து, அங்கு சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்துவர்களுக்கு தனது விசிர்றிங்காட்டை வழங்கியுள்ளார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் நாம் இப்போது அவசர தேவைகளுக்கா காத்திருக்கின்றோம், இந்த மட்டையை சாப்பிடுவதா என வினவியுள்ளார். நபர் மீது ஆத்திரமடைந்த பியசேன அவரின் சேட்டை பிடித்து இழுத்துள்ளார். பதிலுக்கு நபரும் சேட்டை பிடித்துள்ளார். அங்கே இழுபறி உருவாகி அடிதடியில் மாறியுள்ளது. பியசேனவின் மெய்பாதுகாவலர்கள் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவரை அங்கிருந்து கொண்டு சென்றதாக தெரியவருகின்றது.

பியசேன தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட அண்மையில் ஆழும் கட்சியில் இணைந்து கொண்டவர் என்பது யாவரும் அறிந்தது.

2 comments :

Unknown January 17, 2011 at 4:31 PM  

He is the one of the crazy in the world,

Anonymous ,  January 17, 2011 at 6:24 PM  

a person who represent the consituency in the parliament should not how to behave and how to serve the people,as it is a sacrificing career.What to do !
we are the people select them and we are the people suffer.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com