Wednesday, December 29, 2010

கொழும்பு நகரம் சிசிரிவி கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது.

கொழும்பு நகரத்தினுள் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் வாகன நெரிசல் என்பவற்றை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் என நகரின் சகல பாகங்களிலும் சிசிரிவி கமராக்கள் இன்று பொருத்தப்பட்டுள்ளது. இதன் கட்டுப்பாட்டு அறை கொழும்பு மவுண்டட் பொலிஸ் பிரிவின் கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனை இன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

நகரின் 28 பிரதான இடங்களில் மொத்தமாக 108 கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் கண்காணிப்பு பணிக்கென விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட சிறப்பு பொலிஸ் பிரிவு ஒன்று அமர்த்தப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com