Wednesday, November 17, 2010

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் நியமனம் தொடர்பாக கல்வியமைச்சருக்கு முறைப்பாடு

கிழக்கு பல்கலைகழகத்திற்கு பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை உபவேந்தராக நியமிப்பதற்கு தீவீரமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தமிழர் ஒருவரை அப்பதவிக்கு நியமிக்குமாறு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உயர் கல்வி அமைச்ர் எஸ்.பி.திசநாயக்காவிற்கு கடிதமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயர் கல்வி அமைச்சருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம்

கிழக்கு பல்கலைக்கழகமானது பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழ்கின்ற பிராந்தியத்தை கொண்ட பல்கலைக்கழகமாகவும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை பேணி பாதுகாக்க வேண்டிய ஒரு பல்கலைக்கழகமாகவும் திகழ்கின்ற நிலையில் தற்போது பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை உப வேந்தராக நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது. திட்டமிட்டு கிழக்கு பல்கலைககழகத்தை பாதிப்படையச் செய்யும் முயற்சியாகவும் தமிழர்களின் பாராம்பரிய பண்பாட்டு விழுமியங்களை பேணி பாதுகாக்காது நசுக்குவதற்கான முயற்சியாகவும் அமைகின்றது.

கிழக்கு பல்கலைக்கழத்திற்கு எதிர்காலத்தில் கல்வி சார்ந்த ஆய்வுகளை மேற்கொள் ள வேண்டியுள்ளது. குறிப்பாக கலை காலச்சாரம்இ பண்பாட்டு விழுமியங்களையும் பல நூல்களையும் ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டிய கடப்பாடும் உள்ளது.

இதனை நிறைவேற்றுவதற்கு மேலும் கல்விமான்களையும் கல்வி சமூகத்தை உருவாக்கவதற்கு கிழக்கு பல்கலைககழகத்திற்கு தமிழ் உபவேந்தரின் பணி அத்தியவசியமானது என தெரிவதித்துள்ள அவர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவரை நியமிப்பதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கையினை கைவிடடு பொருத்தமான ஒரு தமிழரை உபவேந்தராக நியமிக்க வேண்டுமெனவும் உயர்கல்வி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com