Thursday, November 18, 2010

அன்பான புலம்பெயர் தமிழர்களே! அவதானம்! அவதானம்!

மாளடித்த பிள்ளைகளை வைத்து மாவீரர் தினவிழா என்ற பெயரில், மகா மண்டபம் ஒன்றெடுத்து மக்களை அழைத்து மாகா கலக்சன் கண்ட ருசிகாரர் இந்த வருடமும் அவ் விழாவை செய்ய போகிறார்களாம் என ஈ-மெயில்கள் மூலம் அனுப்பிகொண்டிருக்கிறார்கள். உங்கள் யாபேரின் வீடுகளுக்கும் ஈ.மெயில் அனுப்பியிருப்பார்கள் என நான் நினைக்கிறேன். நீங்களும் வாசித்திருப்பீர்கள். நிறைய வைரஸ் காகித புலிகள் நிறைந்துவிட்டார்கள்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் புலிகளும், புலித்தலைவரும் மாண்டுபோன பின்பு தலைவர் இருக்கிறார், தலைவர் வருவார், என மடமைகளாய் ஆக்கி வைத்திருந்த தமிழர்களை ஏமாற்றி பிழைத்த புலிப்பினாமி கூட்டங்கள் மாவீரர் விழா மாதம் வந்தவுடன் மீண்டும் புற்றீச்சலாய் புறப்பட்டு விட்டார்கள். முன்னர் போல் வீடுகளுக்கு வந்து நேரடியாக காசு கேட்க வரப்பயந்து இந்த மாவீரர் தினவிழாவை பயன்படுத்தியாவது கொத்துரொட்டி, வடை, தோசை, அப்பம் போன்ற இத்தியாதிகளை விற்று பிழைப்பதற்கு கடை போட மீண்டும் முனைகிறார்கள்.

தலைவர் இருந்த காலத்தில் உங்களுக்கு தெரியும், வெளிநாடுகளில் பல்லாயிரக்கணக்கான அமைப்புகள் (புனர்வாழ்வு கழகம், பேரவை, ஊரவை, மக்களவை, கோயில்) என ஊருப்பட்ட பெயரில் ஊருபட்ட ஆக்கள் எதாவது ஒரு பெயரில் அமைப்புகள் அமைத்து வைத்திருந்து தமிழர்களை ஏமாற்றி காசு பிழைப்பு நடத்தியவர்கள். 2009 ஆம் ஆண்டு ஐனவரியில் தொடங்கி மே மாதம் 18வரை ஒட்டுமொத்த தமிழனிடமும் 1லட்சம் பிறாங் வங்கியில் கடனெடுத்து தாங்கோ என்று சொல்லி ஊருப்பட்ட பேரிடம் காசை வாங்கிக்கிகொண்டு அவர்களுக்கு டாட்டா காட்டி ஆப்பு வைத்துவிட்டு போனவர்கள்.

புலிகளுக்கு என்று காசு சேர்த்தவங்களும், காசுவாங்கியவங்களும் வெளிநாடுகளில் கார், கடைகள், வீடுகள், என வசதியாக வாழ்கிறார்கள். காசு கடன் எடுத்துகொடுத்தவர்களில் பல பேர் இப்போ சிரிக்கக்கூட முடியாமல் திரிகிறார்கள். புலிகளுக்கு பலவருடங்களாக மாத, மாதம் காசுகொடுத்தவர்களில் கொஞ்சபேர் புலிமுகவர்களினால் கடைசியாக வீசிய மாய வலையில் சிக்காதவர்கள் கொஞ்ச பேர் காசு கடனெடுத்து கொடுக்காமல் தப்பித்துவிட்டார்கள். அவர்கள்தான் இன்னமும் புலிகளை பற்றி புகழ்ந்து பேசித் திரிகிறார்கள்.

கடைசிநேரத்தில் சுத்துமாத்து புலிமுகவர்களுக்கு பல ஆயிரக்கணக்கான பிறாங்குகள், டெலர்கள் என கடனெடுத்து கொடுத்தவர்களை நினைக்கும்போது ஒருவகையில் மனதுக்குள் சந்தோசமாக இருக்கிறது, கவலையாகவும் இருக்கிறது. இவர்களால் எத்தனை பேர் இறந்திருப்பார்கள்.

சரி அதைவிட்டுவிடுவோம். தமிழன் என்றாலே சுத்துமாத்துக்காரன்தானே அவர்களில் புலம்பெயர் தமிழர்கள்தான் பயங்கரமான சுத்துமாத்துகாராகள் அதிலும் புலிபினாமிகள் உலகமகா சுத்துமாத்துக்காரர்கள். ஏன்என்றால் உலகில் எங்கெல்லாம் தமிழன் வாழ்கின்றானே அவ்வளவு பேரிடமும் காசை சுத்தியிருக்கிறாங்கள். இவங்களை மாதிரியானவர்களை அரேபிய நாடுகளில் கல்லால் கொல்வது போல் இவகளையும் கல்லால் எறிந்துகொல்லவேண்டும் அல்லது உயிரோடு கொழுத்தவேண்டும்.

அவங்கள், சனத்திடம் காசை மட்டும் ஏமாற்றி வாங்கவில்லை நகை, நட்டுகளையும் பலரிடம் ஏமாற்றி வாங்கிபோட்டாங்கள். இதில் இன்னுமொரு சோகமான விடயம் என்னவென்றால் புலிகளுக்காக வீடு வீடாய் காசு வாங்கி திரிந்தவர்கள் வாங்கபோன அந்த வீடுகளை வடிவாக நோட்டம் வைத்து, பின்பு அந்த வீடுகளில் சனநடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து அந்த வீட்டுகளுக்குள் நுழைந்து, அவ்வளவு பேரின் வீட்டு நகைகளையும் துடைத்து வழித்து களவெடுத்து கொண்டுபோய்விட்டார்கள்.

எனக்கு தெரிந்து முன்னர் புலிகளுக்கு காசுகொடுத்தவர்களின் மனைவிமார்கள் பலபேர் இப்ப தாலிக்கொடியில்லாமல் திரியினம்.

புலிப்பொடியல் வீட்டுக்கு வீடு காசுவாங்க நாலு அல்லது ஐந்து பொடியல் தான் ஒன்றாக சேர்ந்து போவார்கள். முன்னர் புலியாதரவாளர்களாக இருந்த வீட்டுகாரர்களும், வீட்டுக்காரிகளும் புலிபொடியளை கண்டால் அவையளுக்கு வாயால தேன் வடியும் அதனால வாங்க தம்பிமாரே என்றவுடன், அவையளும் வீட்டுகாரின் மனைவியை அக்கா என்று அன்பாக அழைப்பார்கள், புருசன்காரனை அண்ணே என்பார்கள். அவரை அண்ணா என்றழைத்தால் அண்ணாவின் மனைவியானவளை அண்ணி என்றல்லவா அழைக்கவேண்டும்?

பெடியள் அக்காவில முதலில் கண்ணை வைத்திருவினம். அண்ணையைவிட பொடியளுக்கு அக்காவில்தான் பாசம்கூட. ஏன்என்றால் உடன்பிறந்த தம்பிகள்தானே?? அக்காவுக்கு ஆக வயதுபோன ஆள் என்றால் நைசா அவர்களின் மகளமார் மேல கண் வைப்பினம். சில நேரம் வீட்டுக்கு வருகின்ற தம்பிமாரில் அக்காமாரும் புருசனைவிட பாசமாகிவிடுவினம். என்ன இழவோ தெரியவில்லை?

இப்ப யாராவது பொடியள் வீட்டுக்கு வந்து மணியடித்தால் அக்காமார் கதவு ஓட்டையால் பார்த்துவிட்டு அப்பா, அப்பா யாரோ வந்து நிக்கிறாங்கள் நீங்க ஒருக்கா பாருங்கோ என்கிறார்கள். அக்காமாரும் விடிய எழும்பி வேலைகளுக்கு போய் பொடியளிடம் காசுகளை கொடுத்து கொடுத்து நல்லா ஏமாந்துபோய்விட்டினம்.

முன்பு புலிகளுக்கு காசுசேர்த்தவர்கள் இப்ப பள்ளிகூடம், கோயில், அன்னதான மடம் கட்டப்போறம் காசுதாங்கே என கொப்பிகளை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள். அதையும் விடுவம், நான் இப்ப உங்களுக்கு சொல்ல வந்தவிடயம் என்னவென்றால்.. இந்த மாவீரர் விழாவுக்கு காசு சேர்க்கின்ற விடயத்துக்கு வருவோம்...

மாவீரர்கள் என்றால் யார்? தலைவர் இருக்கும்தனைக்கும் அப்பாவி பிள்ளைகளை ஆள்வைத்து பிடித்து தன்னுடைய பயங்கரவாத போர் நடத்திக்கொண்டிருந்தவர். வருடாந்த உரைநடத்துவதற்காகவும், அந்த தொகையை காட்டி வெளிநாடுகளில் இனவாத நஞ்சை தலையில் ஏற்றி வைத்திருப்பவர்களிடம் காசு பறிப்பதற்கும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பிள்ளைகளை பலி எடுத்தார். இப்படி தலைவரால் வீணாக பலிகொடுக்கப்பட்டவர்களா மாவீரர்கள்?

கடைசிகட்ட போரில் தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும், காப்பாற்றுவதற்காக 33மாதங்களாக கட்டாயமாக பயிற்சிகொடுத்து பலிகொடுக்க பட்டவர்களும் நாட்டுக்காக உயிர் நீத்தவர்களா? வடிவாக சிந்தித்து பாருங்கள் புலி இயக்கத்தில் பல வருடங்களாக இருந்த பழையவர்கள் எல்லோரும் தங்கள் மனைவி பிள்ளைகளுடன் இராணுவத்திடம் போய் சரணடைந்துவிட்டார்கள். இவர்களா நாட்டுக்காக போராடியவர்கள்?

இவங்கள் கடந்த மூன்று சகாப்தகாலமாக அப்பாவிபிள்ளைகளை பலிகொடுத்து பிழைப்பு நடத்தியவபர்கள். பிரபாகரனுக்கு இறந்த பிள்ளைகளுக்கு மகாவீரர் பட்டம் கொடுப்பதற்கும், மகாவீரர் விழாவில் வந்து உரை நடத்துவதற்கும் என்ன தகுதியிருக்கிறது.

பிரபாகரன் உண்மையில் தமிழ் மண்ணுக்காக மாண்டுபோனவர்களுக்காக மரியாதைகொடுத்திருந்தால் தானும் போராடி இறந்திருக்கவேண்டுமல்லவா? ஆனால் பிரபாகரனோ கடைசிவரை தனது உயிரை காப்பாற்ற ஓடாத ஓட்டம் ஓடி பல ஆயிரக்கணக்கான மக்களையும் பலிகொடுத்து முள்ளி வாய்காலில் இராணுவத்திடம் அகப்பட்டு இறந்ததுதான் உண்மை.

சிலோன் தமிழர்களிடம் காசுவாங்கி பிழைப்பு நடத்திய நெடுமாறன் நெடுகசொல்லுகிறார் தலைவர் இருக்கிறாராம், வருவாரம் என்கிறார். சரி, தலைவர் வந்தால் எனிமேல் போராட்டம் நடத்துவதற்கு பிள்ளைகள் வேண்டுமே? வெளிநாடுகளில் இருந்து புலிகளுக்கு ஆதரவளித்தவர்களும், பணம் கொடுத்தவர்களும் தங்களுடைய பிள்ளைகளை தலைவரிடம் ஒப்படைப்பார்களா?

தலைவர் வன்னியில வைத்து வீட்டுக்கு ஒரு பிள்ளை, இரண்டு பிள்ளை என வாங்கி போராட்டம் நடத்தியவர். பிறகு வீட்டில உள்ள எல்லாரும் வாங்கோ என பிடித்து சண்டைபோட்டவர்.

நான் வன்னி சனத்தை விசாரித்தவரை கடைசிகட்டபோரில் புலிகளுக்கும் சனத்துக்கும்தான் சண்டை நடந்ததாம். புலிபெட்டையள்தானாம் கூடுதலாக சனத்தை போகவிடாமல் பிடித்து வைத்திருந்தவர்கள். சனம் கொஞ்ச பொட்டையளை பிடித்து உயிரோடு வெட்டி கொழுத்தினார்களாம்.. அப்படியானால் சனத்தால் கொல்லப்பட்ட புலிகளும் மாவீரர்களா?

'தலைவர் முப்பது வருடமாக ஆயுதம் வைத்திருந்து நடத்திய போராட்டத்தைவிட, தலைவரை காப்பாற்ற வெளிநாடுகளில் உள்ள புலியாதரவாளர்கள் நடத்திய மூன்று மாத காலமாக உலகம் முழுவதும் தலை கீழாக நின்று நடத்திய போராட்டம்தான் தலைவர் நடத்திய போராட்டத்தை விட பெரிய போராட்டம்.'

தலைவருக்காக தலைகீழாக நின்று போராட்டம் நடத்தியவர்கள்தான் மே மாதம் 18 திகதியிலிருந்து சிறிலங்காவுக்கு தொடர்சியாக போய்கொண்டிருக்கிறார்கள். இவங்கள்தான் பச்சை பொய்யனுகள். இந்த மகா துரேகிகளா மாவீரர்களுக்கு விழா எடுக்கபோகிறார்கள்? அல்லது மாண்டுபோன நம்மினப் பிள்ளைகளை பிணமாக்கி வெளிநாடுகளில் பெரும் பணமாக்கி பெரும் வாழ்வு நடத்துபவர்களா மாவீரர்களுக்கு விழா எடுக்கபோகிறார்கள்?

வெளிநாட்டிலிருந்து வேசம்போட்ட இந்த நஞ்சனுகள்தான் நம் நாட்டையும், நம் பிள்ளைகளையும், நமது மக்களையும் அழித்தவர்கள். இவங்கள்தான் வன்னி மக்களுக்கும் கோவணம் கட்டிவிட்டவர்கள். வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் இவர்கள் கோவணம் கட்டிவிட்டவர்கள் என்பதை தமிழர்களே தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். இவங்கள்தான் மாவீரர் விழா எடுத்து நாம் கட்டியிருக்கும் கோவணத்தையும் உருவ முயலுகிறார்கள்.

அன்பான புலம்பெயர் தமிழர்களே! அவதானம்! அவதானம்! நமது இறந்துபோன உயிர்களுக்காக நாம் நாளும்தானே மனம் வருந்திகொண்டிருக்கிறோம். பின்பு ஏன் பிரபாகரனால் போலியாக தோற்றுவிக்கப்பட்ட இந்த கார்த்திகை மாதம் 27 திகதி மாவீரர்களுக்கா என்று போய் பணத்தை இந்த பச்சைபொய்யனுகளுக்கு கொடுக்கிறீர்கள்.

மடிந்துபோன நம்மினத்தை நினைத்து
நாளும் நாம் அழுது வடிக்கின்றோம்

நாளொன்று வைத்து நம்மை வரவழைத்து
நல்லா ஏமாற்றப்பார்கிறார்கள் நயவஞ்சகர்கள்
நம்மினமே நம்பி நடவாதே இவர்களை நம்பி நடவாதே

நன்றி. கி.பாஸ்கரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com