Saturday, November 6, 2010

நெடுங்காலங்களாக தேடப்பட்டுவந்த ஜேர்மன் புலி கைது:

புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அகிலன் என அறியப்படும் இவர் ஜேர்மனியில் புலிகள் மேற்கொண்டுவந்த பயங்கரவாதத்திற்கு துணைபோகும் பல செய்பாடுகளின் சூத்திரதாரி என தெரியவருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் இடம்பெற்ற வாகீசனது கைதை தொடர்ந்து இவர் தொடர்பான தகவல்கள் உலகிலுள்ள பல புலனாய்வு நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டு அகிலன் தேடப்பட்டு வந்த நிலையில் மடகாஸ்காரிலிருந்து நாடுகடத்தப்பட்டு ஜேர்மனுக்கு வந்தவேளையில் டஸல்டோர்ஃப் விமான நிலையத்தில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

இவர் மடகஸ்தாரிலிருந்து நாடுகடத்தப்பட்டாரா இருநாட்டு உறவினூடாக இவர் மடகஸ்தார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஜேர்மன் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டாரா என்பது இதுவரை தெளிவற்றதாக காணப்படுகின்றது. வாகீசன் கைது செய்யப்படுவதற்கு முன்னரே கைது தொடர்பான விடயத்தினை அறிந்திருந்த இவர் ஜேர்மனியிலிருந்து தப்பியோடி மடகஸ்தார் மற்றும் அண்டைய நாடுகளில் ஒழிந்திருந்தாக கூறப்படுகின்றது. இவர் கைது செய்யப்படும்வரை தடுத்துவைக்கப்பட்டுள்ள வாகீசனின் வழக்கு தாமதமாகியதால் வாகீசன் தரப்பு புலிகளே இவரது மறைவிடத்தை காட்டிக்கொடுத்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

இவருடைய கைதினை தொடர்ந்து மேலும் பல கைதுகள் இடம்பெறலாம் எனவும் , வாகீசனின் வழக்கு நீதிமன்றுக்கு விரைவில் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

2005 தொடக்கம் 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் புலிகளமைப்பின் ஜெர்மனியக் கிளையின் செயற்பாட்டு உறுப்பினரான 35 வயது இவர் ஜேர்மனியக் குடியுரிமையினைக் கொண்டுள்ளதாக அரசதரப்பு வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஜேர்மனியச் சட்டத்தின் பிரகாரம் இந்த அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதோ அல்லது அந்த அமைப்பின் அங்கத்தவர்களாக இருப்பதோ குற்றமாகும்.

அகிலன் ஜேர்மனியில் புலிகள் அமைப்பினது செயற்பாடுகளை ஒழுங்குசெய்ததோடு புலிகளமைப்புக்குத் தேவையான வழங்கல்களையும் மேற்கொண்டுவந்ததாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com