Friday, November 12, 2010

யுத்த விமானங்களை கொள்வனவு செய்வதில் உலகில் முதலிடத்தில் இந்தியா!

ஸ்டொக்கோம் சர்வதேச ஆராட்சி நிலையம் கடந்த புதன் கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கடந்து 2005 முதல் 2009 வரையான காலப்பகுதி தரவுகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு யுத்த விமானங்களை விநியோகிக்கும் நாடுகளின் முன்னணியில் அமெரிக்காவும் ரஸ்யாவும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

உலக அளவில் யுத்த விமானங்களை கொள்வனவு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் , விநியோகிக்கும் நாடுகளின் வரிசையில் அமெரிக்காவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005 - 2009 வரையான காலப்பகுதியில் 50 நாடுகள் 995 யுத்த விமானங்களை கொள்வனவு செய்துள்ளன. அவற்றில் 341 யுத்த விமானங்களை அமெரிக்கா விற்பனை செய்துள்ளது.

இதற்கு முந்திய ஐந்தாண்டு காலப்பகுதியில் 286 யுத்த விமானங்களையே அமெரிக்கா விற்பனை செய்திருந்தது. இந்தக்காலப்பகுதியில் 219 யுத்த விமானங்களை ரஸ்யா விற்பனை செய்துள்ளது.

யுத்தவிமானங்கள்தான் உலகின் அதிவிலையுயர்ந்த ஆயுதங்களாகும். இவை லட்சக்கணக்கான டொலர்கள் பெறுமதி வாய்ந்தவையாகும். கோடிக்கணக்கான டொலர்களை சம்பாதிக்கவே இந்நாடுகள் இப்பயங்கர ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com