Sunday, October 17, 2010

துரோகிகள் பட்டியல் நீண்டு செல்கின்றது. களையும் எடுக்க வேண்டுமாம். கீ. கீ. கீ. கீ.

நாடு கடந்த தமிழீழ பிரதி நிதிகளிற்கிடையே முறுகல் உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. அவர்களில் 7பேரது படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் கனடாவில் ஒட்டப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கூடிய நாடு கடந்த அரசின் தமிழீழ அமர்வின்போது கைகலப்பு ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக கனடா கந்தசாமி கோயிலில் கனடாவில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிற்கிடையிலான கூட்டம் இடம்பெற்றது. தொடர்ச்சியாக இடம்பெற்ற முறுகல் தற்போது சுவரொட்டியாக வெளிவர தொடங்கியுள்ளது.

கடந்த காலங்களில் மாற்று கருத்து கொண்டோர், புலிகளின் தவறுகளை சுட்டிக்காட்டியோரை துரோகிகள் என்றும், எட்டப்பர் என்று முத்திரை குத்திய கூட்டம் இப்போது தமக்கு தாமே
முத்திரை குத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த கொள்ளை குழு இன்னும் தமக்குள் தாமே மோதுண்டு வீதிக்கு வரும் நாட்களே தற்போது அரங்கேறியுள்ளது. இது இன்னும் விரிசலடைந்து வீதி சண்டையாக மாறும் நாட்களும் வெகு தூரத்தில் இல்லை.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்று வீறாப்பு பேசிய திருட்டு கூட்டம் இன்று தமக்குள் தாமே துரோகிகள் முத்திரை குத்தி சுவரொட்டி ஒட்டும் நிலைக்கு வந்துள்ளது. இறுதியாக இது இன்னும் விரிசலடைந்து புலிகளின் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் அவ் அவ் நாடுகளின் கைகளிற்கு செல்லும் என்பதுவும் வெளிப்படை.

துரோகிகளாக சித்தரிக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ பிரதிநிதிகளின் 7பேர் அடங்கிய புலிகளின் சுவரொட்டிகள் கனடா முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது

நாடு கடந்த தமிழீழம் என்று புலம் பெயர் நாடுகளில் தமக்குள் தாமே தேர்தல் நடாத்தி தாமே உறுப்பினர்களை தெரிவு செய்து கொண்டனர். இதற்காக பல ஆயிரம் டாலர்களையும் செலவிட்டனர். இதற்கு பின்புலமாக மேற்குலகமும் மறைமுகமாக நிற்கின்றது என்பதை வரலாறு என்றோ ஒருநாள் நிரூபித்து நிற்கும். நாடு கடந்த தமிழீழ முன் மொழிவை வைத்தவர் பிரபாகரனின் முளம்தள் இட்ட மரணத்தின் பின்னான தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவர் கேபி ஆவார். இவர் தற்போது இலங்கை அரசின் விருந்தாளியாக இருப்பது வேறு விடயம். கேபி இலங்கை அரசின் விருந்தாளியாக்கப்பட்ட பின்பு 'அமெரிக்க' உருத்திரகுமாரன் தலைவர் பொறுப்பை உத்தியோகபற்றற்ற முறையில் ஏற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தேர்தல், பிரதம பதவி என்று எல்லாவற்றையும் தானே ஏற்றுக் கொண்டார். பதவி, பணத்திற்கு அலையும் இக் கூட்டத்திற்குள் தற்போது பலத்த குத்து வெட்டு. தொடர்ந்து இரு குழுக்களாக பிரிந்து கொண்டனர். இரு குழுக்களும் ஒருவரையொருவர் துரோகிகள் என்று சொல்லி கொள்கின்றனர். இப்ப என்னடாவென்றால் ஒரு குழு மற்ற குழுவை கை நீட்டி களையெடுக்கப் போகின்றார்கள் என்று புறப்பட்டு விட்டனர். இதன் தொடர்ச்சியாக கனடாவில் தமிழ் கடைகளின் சுவர்களில் களையெடுப்பு பற்றிய சுவரொட்டிகளும், துரோகிகளின் பெயர் விபரமும் வெளியாகியுள்ளது. இது நல்ல கூத்துதான். புலியும் புலியும் சண்டையாம்... களையெடுப்பாம்.... மனிதர்கள் நாங்கள் விலத்தி நின்று பார்ப்போம்.

25 வருடங்களாக இவர்களைப்பற்றி நாங்கள் கூறி வருவதை கேட்காமல் தொடர்ந்தும் பகுத்தறிவின்றி இவர்கள் பின்னால் திரியும் ஒரு கூட்டம் இந்த களையெடுப்பு 'யுத்தம்’ இன் பிறகாவது உண்மை நிலையை உணருவார்களா? என்று பார்ப்போம். ஏமாளிகளாக நீங்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கப் போகின்றார்கள். இலங்கையில் இக்கும் தமிழ் மக்கள் யாரும் இந்த நாடு கடந்த தமிழீழம், தேர்தல், பிரதம மந்தரி, தொடர்ந்த குத்து வெட்டு எதனையும் பற்றியும் அக்கறைப்படுவதும் இல்லை, காதில் போட்டுக் கொள்ளதும் இல்லையாம்.
தெளிவாக வாசிக்க படங்களின் மேல் கிளிக்செய்யுங்கள்

4 comments :

பஞ்சகுலசிங்கம் ,  October 17, 2010 at 4:14 PM  

ஐயோ ஐயோ இந்த செய்தியையும் நோட்டீஸையும் போட்ட நீங்கள் எந்த சுவரில என்ர தலையை முட்டலாம் என்று சொல்லுங்கோவன்.

சேகர் ,  October 17, 2010 at 6:14 PM  

ஹலோ பஞ்சலிங்கம்.

எங்ககொண்டு தலைய உடைக்க முடியும் என்று கேட்கிறயளா? நோர்வேயில சேதுவிடம் கேட்டால் இடத்துக்கே கூட்டுக்கொண்டு விடுவார். இடம் பிடிக்கல என்ற சொன்னயள் என்றால் தன்ன சுத்தியலால ஒன்று போடுவார். அவ்வளவுதான் கதை.

அவர்தானே உங்கட நண்பரா போச்சே நான் எதற்கு மேலும் சொல்ல.

Anonymous ,  October 17, 2010 at 10:42 PM  

இவ் விடயமாக முதலில் ஒரு விடயத்தை முக்கியமாக கனடா வாழ் தமிழ் மக்களுக்கு கூற விரும்புகின்றேன்.

முதலில், நீங்கள் ஐரோப்பிய, கனடா மக்களின் வாழ்க்கை முறையை பார்த்து, உலகஅறிவுக்கான வசதிகள், உரிமைகள், உதவிகள் எல்லாவற்றையுமே நாட முயற்சி செய்து முன்னேற முயற்சி செய்யுங்கள்.

அதைவிட்டு, இன்றைய காலகட்டத்திலும் தமிழீழ சுத்துமாத்து குப்பைகளை நாடி, அதுகளின் கதையை நம்பி, அதன் பின் தொடர்ந்து குப்பைக்குள் வாழும், குப்பையை நாடும் நத்தைகளாக இனிமேலும் வாழ நினைக்க வேண்டாம்.

விழித்து எழும்புங்கள்! இதுவே கடைசி கட்டம்!!!

Anonymous ,  October 23, 2010 at 1:53 AM  

EEsan - he lived in Norway once a time 1987-1990 like that. here he was a one of criminal - pure criinal.
ceet many money from tamils here.

Ruban - Oslo.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com