18000 KG உணவுப் பொருட்களுடன் சீ130 விமானம் பாக்கிஸ்தான் புறப்பட்டது.
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான சீ-130 விமானம் 18000 கிலோகிராம் உலர் உணவுப் பொருட்களுடன் பாக்கிஸ்தான் நோக்கி புறப்பட்டுள்ளது. பாக்கிஸ்தானில் பெய்துவரும் கடும்மழைகாரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் சர்வதேச நாடுகளால் முன்னெடுக்கப்படும் நிவாரணப்பணிகளுடன் இலங்கையும் இணைந்து கொண்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவின்பேரில் வெளிவிவகார அமைச்சு இவ்நிவாரணப் பொருட்களை பாக்கிஸ்தான் நோக்கி அனுப்பியுள்ளது. சத்தோச நிறுவனத்தினரால் விமானப்படையின் அதிகாரிகளிடம் இப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment