Wednesday, April 28, 2010

இலங்கையில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது. UNHCR

இடம்பெயர் மக்களை மீளக் குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்மை மகிழ்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயரிஸ்தானகம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் காரணமாக இடம்பெயர் மக்களை மீளக் குடியேற்றும் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 7000 பேர் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதியில் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக அகதிகள் முகவர் நிறுவனத்தின் பேச்சாளர் அன்ட்ரிஜ் மெக்கிக் ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பானது முதல் இதுவரையில் சுமார் 207000 இடம்பெயர் மக்கள் முகாம்களிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களில் அதிகமானவர்கள் சொந்த இடங்களில் அல்லது உறவினர்களுடன் தங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

2009 மே மாத யுத்த நிறைவை அடுத்து 280000 பேர் அரசாங்க இடம்பெயர் முகாம்களில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வழங்கப்படும் 25000 ரூபா நிதி உதவி, போதியளவு உதவிகள் கிடைக்காத காரணத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

எவ்வாறெனினும், இந்த மாத இறுதியளவில் மீண்டும் நிதி உதவிகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சொந்த இடங்களில் மீள் குடியேறிய சுமார் 10000 குடும்பங்களுக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் வழங்கும் உதவு தொகை இதுவரையில் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com