நித்யானந்தாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை?:
நித்யானந்தாவின் 'பலான' சிடியில் உள்ள 5 பெண்களிடமும் விசாரணை- சிஐடி போலீசார் திட்டம்
நித்யானந்தாவின் ஆசிரமத்தில் ரெய்டின்போது சிக்கிய 35 சிடிக்களில் 5 பெண்கள் அவருடன் நாள்கணக்கில் உல்லாசமாக இருந்தது தெரியவந்துள்ளதையடுத்து அந்தப் பெண்களிடமும் விசாரணை நடத்தி வாககுமூலம் வாங்க கர்நாடக சிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
நித்யானந்தாவிடம் கர்நாடக சிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பதிவான புகார்கள் குறித்து தமிழக போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந் நிலையில் நித்யானந்தாவிற்கு எதிராக கேரளாவிலும் புகார்கள் தரப்பட்டுள்ளதையடுத்து அது குறித்து விசாரிக்க அம் மாநில சி.ஐ.டி. போலீசார் பெங்களூர் வந்து நித்யானந்தாவிடம் விசாரணை நடத்தவுள்ளனர். இதற்காக 4 பேர் கொண்ட கேரள போலீஸ் குழு பெங்களூர் வருகிறது.
செக்ஸ் ஒப்பந்தம்-90% பேர் தமிழகத்தை சேர்ந்தோர்:
இந் நிலையில் நித்யானந்தாவால் கையெழுத்து வாங்கப்பட்ட செக்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளவர்களில் 90 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
'பலான' ஒப்பந்தம்...
ஆண் பெண் பரவச நிலை, நிர்வாணம், உச்சகட்ட மகிழ்ச்சி ஆகியவற்றுக்காக செக்ஸ் உறவில் ஈடுபடுவது உள்ளிட்ட பழங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட 'தந்திர' கலைகளை கற்பற்காக நாங்கள் தரும் நேரடி பயிற்சி உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சவால் விடும் வகையில் இருக்கும்.
இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், உறுப்பினர்கள் தாங்களாகவே முன்வந்து நிபந்தனையற்ற செக்சுக்கு ஒப்புதல் வழங்குவதாக அர்த்தம் என்று கூறப்பட்டுள்ள 'பலான ஒப்பந்தத்தில்' படித்தே பார்க்காமல் ஏராளமான ஆண், பெண்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
அதிலும் பெரும்பாலும் பெண்களிடம் தான் அதிக அளவில் கையெழுத்து வாங்கியுள்ளனர் ஆசிரம நிர்வாகிகள். இதில் 90 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று இந்த ஆவணங்களை சோதனையிட்ட கர்நாடக சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய பெண்கள் சிலரும் கையெழுத்திட்டு உள்ளனர்.
5 பெண்களிடம் விசாரிக்க திட்டம்:
இதற்கிடையே நித்யானந்தாவின் ஆசிரமத்தில் ரெய்டின்போது சிக்கிய 35 சிடிக்களில் 5 பெண்கள் அவருடன் உல்லாசமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தப் பெண்களிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற கர்நாடக சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து நடிகை ரஞ்சிதாவிடமும் விசாரிக்க திட்டமிட்டு அவரைத் தேடி வருகின்றனர்.
நித்யானந்தாவிடம சிக்கிய அமெரிக்க பெண்:
நித்யானந்தாவில் செக்ஸ் ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் ஒருவரும் கையெழுத்திட்டுள்ளதாக சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரது கணவர் டெல்லியைச் சேர்ந்தவர். இருவரும் அமெரிக்காவில் வசித்து வந்தனர். 3 வருடத்துக்கு முன் நித்யானந்தா அமெரிக்கா சென்றபோது முதல் முறையாக அவரை அந்தப் பெண் வந்து சந்தித்து பக்தை ஆனார்.
அடிக்கடி அமெரிக்காவில் உள்ள ஆசிரமத்துக்கு சென்றதோடு பின்னர் பெங்களூர் ஆசிரமத்தில் வந்து தங்கிவிட்டார். இதையடுத்து இவரை கணவர் விவாகரத்து செய்துவிட்டார் என்று தெரிய வந்துள்ளது.
இயற்கைக்கு மாறாக உறவு-யுஎஸ்சில் வழக்கு:
இந் நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பக்தர் டக்லஸ் மெக்கெல்லர் என்பவர் கலிபோர்னியா நீதிமன்றத்தில் நித்யானந்தா மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நித்யானந்தா இயற்கைக்கு மாறாக உறவு கொண்டதாக புகார் கூறியுள்ளார்.
நித்யானந்தாவின் பக்தராக இருந்த இவர் டக்லஸ் என்ற தனது பெயரை நித்யபிரபா என பெயரை மாற்றிக் கொண்டு அமெரிக்க ஆசிரமத்தில் பணியாற்றினார். அப்போது நித்தயானந்தா தனி அறையில் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்ததாகவும் புகாரில் கூறியுள்ளார்.
நித்யானந்தாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை?:
விசாரணைக்கு நித்யானந்தா முழு ஒத்துழைப்புக் கொடுக்க மறுப்பதால் அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை (லை டிடெக்டர்) சோதனை நடத்தவும் கர்நாடக போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நித்யானந்தாவுக்கான போலீஸ் காவல் நாளையுடன் முடிவடையும் நிலையில் அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதால் அவருக்கு உண்மை கண்டறியும் சோதன நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு செய்ய கர்நாடக போலீஸார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
0 comments :
Post a Comment