Thursday, March 25, 2010

குர்ஆனின் படத்துடன் விளம்பரம்; முஸ்லிம்கள் கடும் ஆட்சேபம்

தமிழ்ப் பத்திரிகையொன்றில் திருக்குர்ஆனின் பெரிய அளவிலான படத்துடன் ஒரு கிண்ணத்தையும் பிரசுரித்து ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு விளம்பரம் செய்யப்ப ட்டுள்ளதை முஸ்லிம்கள் கடுமையாக ஆட்சேபிக்கின்றனரென ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் விடுத்து ள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

பள்ளிவாசலுக்குச் செல்லும் அனைவரும் பிரார்த்திக்குமாறும், “அல்லாஹ்வே உங்கள் ஆசீர்வாதத்தைத் தாருங்கள்” என்றும் ஏக வல்ல அல்லாஹ்வையும் அவனுடைய அருள்மறையாம் குர்ஆனையும் மிகவும் நிந்தனை செய்யும் வண்ணம் இவ்வரசியல் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளதை முஸ்லிம் இயக்கங்களும், உலமாக்களும், பொதுமக்களும் எம் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

அல்லாஹ்வையும் புனித குர்ஆனை சம்பந்தப்படுத்தி ஒரு தேர்தல் சின்னத்தைப் பிரசுரித்துள்ளமை இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும்.

முஸ்லிம்கள் இந்நாட்டின் வந்தேறு குடிகள் என முஸ்லிம் சமூகத்தை இழிவு படுத்திய சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரும் இவ்விளம்பரம் முஸ்லிம்களின் உள்ளங்களை ஆழ புண்படுத்தியுள்ளது.

சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு நாடு பூராவும் சுற்றித்திரிந்து முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்விடுத்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நிச்சயம் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

அடுத்து ஏகவல்ல அல்லாஹுத்த ஆலாவையும், அவனது அருள்மறையையும் மிகவும் கீழ்த்தரமான அரசியல் விளம் பரத்துக்குப் பாவித்ததையிட்டு பொன்சேகாவின் கட்சியும், அதன் பிரதான பங்காளியான ஜே.வி.பியும் முஸ்லிம்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும்.

புத்தபிரானின் உருவச் சிலைக்குக் கீழே நிர்வாணமான ஒரு பெண்மணியை வரைந்து பெளத்த மக்களை சீற்றமடையச் செய்துள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ள இத்தருணத்தில் முஸ்லிம்களையும் இவ்விதம் விசனத்துக்குள்ளாக்கும் முறையில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மதங்களை நேசிக்கும் யாவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

மதங்களையும், அவற்றைப் பின்பற்று வோரையும் இவ்விதம் அவமானப்படுத்தி களங்கம் விளைவிக்கின்ற இச்செயற் பாடுகளின் பின்னணியில் மேற்கந்திய சதிகாரக் கும்பல்கள் சியோனிஸ சக்திகள் ஒழிந்திருப்பது முஸ்லிம் உலகுக்கு ஒரு புதிய விடயமல்ல. இந்த யூத சியோனிஸத்தின் உள்நாட்டு முகவர்களான ஐ.தே.கவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் வாக்களிக்கக் கோரிய சரத் பொன் சேகாவின் இந்த மதவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக அறிக்கை விடுவார்களா? என முஸ்லிம்கள் கேட்க விரும்புகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4 comments :

aaa March 25, 2010 at 9:45 AM  

ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் அவர்களே நீ எதோ இஸ்லாத்தை சரியானமுறையில் பின்பற்றுபவன் போல் இருந்துகொண்டு சரியாக இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களை பிழையான உனது கருத்துக்களால் திசைமார்றாமல் இருந்தால் போதும்.
“அல்லாஹ்வே உங்கள் ஆசீர்வாதத்தைத் தாருங்கள்” என்று பிரார்த்தனை செய்ததால்.எந்த முஸ்லிம் இயக்கங்களும், உல மாக்களும், பொதுமக்களும் உனது கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்? சிலவேளை அவர்களும் உன்னைப்போன்று கபுறு வணங்க்கிகளாக்கும்.
“முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நிச்சயம் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்”

ஐயா கபுறு வணங்க்கி ஏ. எச். எம். அஸ்வர் அவர்களே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இலட்சினையை (லாஇலாக இல்லல்லாஹ் முஹம்மதுரசூலில்லாஹ் பொறிக்கப்பட்டுள்ளது.) நீ இதுவரைக்கும் பார்த்ததில்லையா?அல்லது அதன் தாரக மந்திரமான அல்லாஹு அக்பர் நாரை தக்பீர் என்கிற வார்த்தைதான் உன் காதுகளில் விழுந்ததில்லையா?
அது சரி புத்தபிரானின் உருவச் சிலைக்குக் கீழே நிர்வாணமான ஒரு பெண்மணியை வரைந்தது. பெளத்த மக்களை சீற்றமடையச் செய்துள்ளது சரிதான்.
வெற்றி கிண்ணத்துக்கு பக்கத்தில் குர் ஆணை வரைந்தால் எதற்க்காக முஸ்லிம்கள் சீற்றமடைய வேண்டும் என நீ விரும்புகிறாய் என்பதுதான் எனக்கு புரியவில்லை முஸ்லிம்கள் இம்முறை வெற்றி கிண்ணத்துக்கு வாக்களித்து விடுவார்கள் என்கிற பீதியா என்ன?
ஐயா கபுறு வணங்க்கி ஏ. எச். எம். அஸ்வர் அவர்களே நீ பீதி கொள்ள வேண்டிய அவசியமே இல்லை ஏனென்றால் நாங்கள் ( முஸ்லிம்கள்) இந்த தேர்தலில் வெற்றி கிண்ணத்தோடு கூட்டு சேரள்ளங்கோ.

இச்செயிதியை வெளியிட்ட தினகரனோ,கபுறு வணங்க்கி ஏ. எச். எம். அஸ்வரோ இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் வந்தேறு குடிகளாவார்கள். சிங்கள மக்கள் மட்டுமே இந்நாட்டின் பூர்வீக குடிகளாவார்கள் என ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும், சுற்றாடல் அமைச்சரும்,மகிந்தாவின் உறவினருமாகிய பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்த கருத்துக்கு இதுவரையும் கண்டனமோ எதிர்போ தெரிவிக்காமல் இருந்து கொண்டு. சரத் போன்சாகா மேல் பலியைப்போட்டுக்கொண்டு உங்களை எல்லாம் நம்புவோரை முட்டாளாக்காமல் இருந்தால் சரி.

Anonymous ,  March 26, 2010 at 6:24 AM  

அடேய் மாட்டு அஸ்வர் , நீ திருந்தவே மாட்டாய்,உனக்கு ஏற்கனவே ஒரு முறை சொல்லிவிட்டேன் நீ எல்லாம் முஸ்லிம்களுக்காக பேசுவதை விட பேசாமல் இருப்பது மேல் உன்னப்போன்றவர்களின் கருத்துக்களால் தான் முஸ்லிம்களும் ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்த வேண்டி வரும் அல்லாஹ் காப்பத்தனும், அப்படி ஒரு நிலைமையை விட்டும். நீ மகிந்தனின் எலும்புதின்னி அதை செய்வதில் முஸ்லிம்கள் முரண் படவில்லை உனது விருப்பம் அதுவானால் நாம் தடுப்பதிக்கில்லை ஆனால் கபுறு வணங்குவதை விட்டும் உன்னையும் உன் குடும்பத்தவர்களையும் தடுத்துக்கொள்ளுமாறு மிக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், நாளை நரகத்தில் இருந்து பதுகத்துக்கொளும்படி உன்னை சார்ந்தவர்களை நான் கேட்டுக்கொள்வதோடு நீயும் கேட்டுக்கொள், உன்னால் முஸ்லிமாக இருப்பதக்கு முடியாவிட்டால் பறவையில்லை (இஸ்லாத்தில்) முனபிக்காக இருக்காதே இது துனியா,ஆகிரா எச்சரிக்கை மறந்துவிடாதே இஸ்லாத்தை அரசியலாக்கிடாதே இஸ்லாத்துக்குள் அரசியளைப்பார் இது இறுதி எச்சரிக்கை!
Deen

sena ,  March 26, 2010 at 1:27 PM  

டீன் என்ன ரொம்ப சூடாகிறயள். அஸ்வருக்கும் இஸ்லாத்தில் பங்குண்டு. அவரும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தலாம் தானே.

Anonymous ,  March 26, 2010 at 1:29 PM  

டீன் என்ன ரொம்ப சூடாகிறயள். அஸ்வருக்கும் இஸ்லாத்தில் பங்குண்டு. அவரும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தலாம் தானே.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com