Sunday, February 14, 2010

வேதாளம் மீண்டும் முருங்கையில் எறுகின்றது.

நாடுகடந்த கோமணத்திற்கு மக்கள் தம்மாலான நிதியுதவியாம்.
வன்னியில் இருந்த கறட்டி ஓணானுகள் எல்லாம் செத்துப்போன நிலையில் வெருட்டி செய்யிறத்துக்கு ஆட்கள் இல்லாமல் புலன்பெயர்ந்த புழைப்பாளிகள் அடிமட்டத்திற்கு இறங்கி வந்துள்ளதை உணர முடிகின்றது. சிகப்பு கோமணம் ஒன்றை கட்டிக்கொண்டு இத்தனை காலமும் தமிழ் மக்களை வாட்டி வதைத்தகூட்டம் தற்போது நாடுகடந்த கோமணம் ஒன்றை கட்டி கொண்டு வலம் வருவதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பிட்ட கும்பல் ஆரம்ப நாட்களில் மக்களிடம் சென்றபோது மக்கள் கதவுகளை இழுத்து அடைத்தனர். அவ்வேளையில் தாம் எந்த காலகட்டத்திலும் நிதி உதவி கோரமாட்டோம் என உறுதியளித்திருந்தமை மக்கள் அனைவருக்கும் நினைவுண்டு. அத்துடன் தமக்கு வேண்டியது குறிப்பிட்ட கோமணத்தை தமிழ் மக்களில் எத்தனைபேர் கட்ட விரும்புகின்றனர் என்பதை அறிவதும். தமிழ் மக்களில் புத்திஜீவிகளின் அலோசனைகளுமே என தெரிவித்திருந்தனர். ஆனால் கடந்த நாட்களில் ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் இக்கோமணத்தை கட்டுவதற்கு மக்களுக்கு விரும்புண்டா என தேர்தல் நடாத்தியபோது இது சரியான கடி என மக்களில் 75 விழுக்காட்டுக்கு மேலானவர்கள் தேர்தல் என்பதைப்பற்றி பொருட்படுத்தவே இல்லை என்பது யாவரும் அறிந்தவிடயம்.

இந்நிலையில் நேற்று லண்டன் வெம்பிளி பிரதேசத்தில் குறிப்பிட்ட கோணத்தை மக்களிடம் திணிப்பது தொடர்பாக இராப்போசனத்துடன் கூடிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாம். கூட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சுமார் 17 பேர் அளவில் கலந்து கொண்டிருந்தார்கள். கலந்துகொண்டவர்கள் அனைவரும் கடந்த காலங்களில் மக்கள் புலிகளிடம் வாங்கிய கப்பத்தில் ஏப்பம் விட்டவர்கள் என தெரியவருகின்றது. அவர்களுடன் மக்கள் புலிகளுக்கு வழங்கிய பணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தொகையுடன் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆடம்பர விடுதியில் விடுமுறை கழித்துவரும் கே.பியின் பிரதிநிதி ருத்திரகுமாரும் கலந்து கொண்டாராம். அவர் ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களுடன் ஸ்கைப்பில் வேறு கதைத்ததுடன் ஊடகவியலாளர்களுடனும் பேசினாராம் என புலிகளின் ஊதுகுழல்களில் ஒன்றான அதிர்வு தெரிவிக்கின்றது. உருத்திரகுமாரன் ஊடகங்களுடன் பேசுவதற்கான மனவலிமையுடன் இருப்பாராயின் தயவு செய்து இலங்கைநெற் ஐ ஒருமுறை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம். எமது செய்தியாளர்களை ஸ்கைப்பில் ilankainet என்ற ஐடி யில் கண்டுபிடிக்கமுடியும்.

இவை அனைத்துக்கும் அப்பால் இன்று வேதாளம் மெல்ல மெல்ல முருங்கையில் ஏற முனைவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பிட்ட இராப்போசனத்திற்கு வந்திருந்தவர்கள் நாடுகடந்த கோணத்திற்கான தேர்தல் செலவுகளுக்காக தம்மாலான நிதியுதவியினை வழங்கினராம் எனவும் அதிர்வு தெரிவிக்கின்றது. இந்த நிலைவந்து சேருமோ எனும் பாடல் வரிகள் எனது மனதிற்கு வந்து செல்கின்றது. வன்னியில் பலமாக இருந்திருந்தால், இவ்வளவு வைக்கத்தான் வேண்டும் இல்லாவிட்டால்........ என்ற காலம் போய் தங்களால் முடிந்த என்ற நிலைக்கு வந்துள்ளமை பரிதாபமாகவுள்ளது.

எதுவாக இருந்தாலும் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். இதற்கு ஒருவர் இருவர் உதவி செய்ய பின்னாட்களில் அவர்கள் செய்யமுடியுமென்றால் ஏன் நீங்கள் செய்ய முடியாது என பொல்லுகள் தடிகளைத் தூக்கவும் இடமுண்டு. முளையிலேயே கிள்ளுவது சிறந்ததாகும்.

குறிப்பிட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்டோரையும் ருத்திரகுமாரனையும் இங்கு காண்கின்றீர்கள்.

லண்டன் தொடர்பாளர்.

1 comments :

Anonymous ,  February 15, 2010 at 1:23 PM  

ok intha kovanam veendam enral ungaludaya kovanam moolamaha ethum vazli undo? athay kongcham chollungo parppam.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com