Monday, February 15, 2010

தேர்தல் அசம்பாவிதங்களை தடுக்க பொலிஸ் தேர்தல் புலனாய்வுப் பிரிவு.

பொதுத் தேர்தல் காலத்தில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய பொலிஸ் தேர்தல் புலனாய்வுப் பிரிவு ஒன்று இம்முறை முதற்தடவையாக ஆரம்பித்துள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

நாடு முழுவதிலுமுள்ள 413 பொலிஸ் நிலையங்களிலும் 40 பொலிஸ் பிரிவுகளிலும் தேர்தல்கள் தொடர்பான தனியான கண்காணிப்பு பிரிவுகள் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் பொலிஸார் தேர்தல் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், பொலிஸ் தேர்தல் புலனாய்வுப் பிரிவின் மூலம் கண்காணிக்க ப்பட்டு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை முன்கூட்டியே தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க இப்பிரிவு இலகுவாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com