Tuesday, February 16, 2010

ஆயுதம் வாங்க கோகைன் கடத்தல்: ஐ.நா.

ஆயுங்கள் வாங்குவதற்காக மேற்கு ஆப்ரிக்காவுக்கு கோகைன் போதைப் பொருள் பெருமளவு கடத்தப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. லத்தீன் அமெரிக்காவிலுள்ள போதை மருந்து கடத்தல் கும்பல்களால், கப்பல்கள் மூலம் கோகைன் போதைப் பொருள் மேற்கு ஆப்ரிக்காவுக்கு கடத்தப்படுகிறது. பின்னர் கோகைனை கொடுத்து அதற்குப் பதிலாக ஆயுதங்கள் வாங்கப்படுகிறது.

குறிப்பாக அல் - காய்தா இயக்கத்தைச் சேர்ந்த குழுக்களாலேயே இத்தகைய நடவடிக்கைகள் பெருமளவு மேற்கொள்ளப்படுவதாகவும், இது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுப்பதற்கு முன்னதாக முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் ஐ.நா. வின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் பிரிவின் நிர்வாக இயக்குனர் அன்டோனியோ மரியா கோஸ்டா தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com