Friday, February 5, 2010

இணையத்தில் இனம் தொடர்பான கருத்துகள்: சிங்கப்பூரில் மூவர் கைது

ஃபேஸ்புக் எனப்படும் பிரபல சமூக கட்டமைப்பு இணையத்தளத்தில் இனம் தொடர்பான பிரச்சினையான கருத்துகளை எழுதியதற்காக மூன்று இளையர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். ஜனவரி 30ம் தேதி போலிசாருக்கு புகார் கிடைத்ததைத் தொடர்ந்து தீவிர விசாரணைக்குப் பிறகு, 17 வயதுக்கும் 18 வயதுக்கும் உட்பட்ட இந்த மூன்று இளையர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மூவரும் ஜனவரி 31ம் தேதியன்று கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ளனர்.
“சிங்கப்பூரின் சமூக இணக்கத்துக்குப் பங்கம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிக்கப்படும்,” என்று பிடோக் போலிஸ் பிரிவின் தளபதியும் போலிஸ் துணை உதவி ஆணையாளருமான டியோ சுன் சிங் கூறினார்.

“ஒருவரின் கருத்துகளை வெளிப்படுத்த இணையம் வசதியான தளமாக இருந்தாலும், இணையத்தில் இடம்பெறுபவைக்கு அவரவர் பொறுப்பேற்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார். “பல இன மதத்தினரை கொண்ட சிங்கப்பூரில் நல்லிணக்கத்துடன் வாழ சிங்கப்பூரர்கள் விரும்பு கிறார்கள். “பல நாடுகளில் பொதுவாக காணப்படுவதைப் போலவே இனம், மதம் சார்ந்த வெறுப்பு ஏற்படுத்தும் நடவடிக்கையை வார்த்தையை சகித்துக் கொள்வது சிரமம்,” என்றார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலை கழகத்தில் சட்டத் துறையின் துணை பேராசிரியர் டாக்டர் எஸ் சந்திரமோகன்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்று புதன்கிழமை இரவு வெளியிட்ட போலிஸ் அறிக்கை தெரிவித்தது.

கீழறுப்புச் சட்டத்தின் கீழ், இனங்களுக்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தும் யாரும் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டால் 3 ஆண்டு வரைப்பட்ட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

கடந்த 2005ம் ஆண்டில் தங்களது இணையப்பக்கத்தில் இனம் தொடர்பான கருத்துகளை எழுதியதற்கு இச்சட்டத்தின் கீழ் இருவர் குற்றம் சாட்டப்பட்டனர். ஒருவருக்கு ஒரு மாத கால சிறை தண்டனையும் மற்றொருவருக்கு ஒரு நாள் சிறையும் $5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com