Monday, February 15, 2010

பாராளுமன்றத் தேர்தலும் கிழக்கு மக்கள் ஐக்கிய முன்னணியின் நிலைப்பாடும்.

தமிழ் இஸ்லாமிய சிங்கள பறங்கிய மக்கள் வாழ்ந்துவரும் கிழக்கு மாகாணத்தில் ஐக்கியத்தையும் தனித்துவத்தையும் நிலைநிறுத்தும் நோக்க்கத்துடன் ஸ்த்தாபிக்கப்பட்ட அமைப்பு என்ற வகையில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் கிழக்கு மக்கள் ஐக்கிய முன்னணியின் நிலைப்பாட்டை கிழக்கு மாகாண மக்களுக்கு வெளிப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற அமைப்பின் மத்திய செயற்குழு கூட்டம் பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டு அவற்றை எமது பெருமதிப்பிற்குரிய கிழக்கு மாகாண மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிண்றோம்.

கிழக்கு மக்கள் ஐக்கிய முன்னணி 2008 இல் ஸ்த்தாபிக்கப்டட்டிருந்த போதிலும் எமது சிந்தனையிலும் கொள்கையிலும் ஐக்கியம் தனித்துவம் என்பவற்றில் ஒரே கருத்தினை வெளிப்படுத்திவரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு பலம்பெற வேண்டும் அதனூடாக கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து மக்களின் பரஸ்பர புரிந்துணர்வுடனான முழுமையான ஐக்கியத்தை கட்டியெழுப்பி கிழக்கு மக்களின் அரசியல் தனித்துவம் நிலை நிறுத்தப்படவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் கிழக்கு மக்கள் ஐக்கிய முன்னணி இன்றுவரை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை ஆதரித்தே வருகிண்றது.

கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல்களில் மட்டக்களப்பு மாநகரசபை தவிர்ந்த ஏனைய சபைகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தனித்துப்போட்டியிட தீர்மானித்தவேளையில் அவ் அமைப்பின் கன்னித்தேர்தல் என்ற காரணத்தால் மட்டக்களப்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்தில் போட்டியிடுவதை நாம் ஆதரித்தோம்.

அதன் பின்னர் நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் இருக்கும் பூரண மக்கள் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபை அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்ற யதார்த்தத்தின் அடிப்படையிலும் கிழக்கில் தமிழ் இஸ்லாமிய மக்கள் பெரும்பாண்மையாக வாழ்ந்துவரும் சூழ் நிலையில் கிழக்கு மாகாணத்தில் சிறுபாண்மையாக வாழ்ந்துவரும் சிங்கள பறங்கிய மக்களையும் ஒண்றிணைத்து சகல மக்களின் ஐக்கியத்தையும் வலுப்படுத்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பும் ஹிஸ்புல்லா தலைமையிலான அமைப்பினரும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலம் கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற முடியும் என்ற காரணத்தினால் நாம் அத்தேர்தலிலும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை ஆதரித்தோம்.
.
இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அல்லது சரத்பொன்சேகா ஆகியோரில் ஒருவரே ஜனாதிபதியாக வரமுடியும் என்ற காரணத்தினால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்க எடுத்த தீர்மானத்தை கிழக்கு வாழ் மக்கள ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் தனித்துவம் அம் மக்களின் ஐக்கியம் என்ற இரு பிரதான கொள்கைக்கும் முன்னுரிமை வழங்கி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் தனித்தோ அல்லது கிழக்கு மாகாணத்தின் அரசியல் தனித்துவத்தை வலியுறுத்தி கிழக்கிலங்கையை மையப்படுத்தும் தமிழ் இஸ்லாமிய மற்றும் சிங்கள அமைப்புக்களுடன் கூட்டுச்சேர்ந்தோ தேர்தலை சந்திக்குமாக இருந்தால் கிழக்கு மக்கள் ஐக்கிய முன்னணி அதனை ஆதரிக்கும்.

மாறாக பாராளுமண்றத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச்சேர்ந்து அதன் சின்னத்தில் போட்டியிடும் பட்சத்தில் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் தனித்துவம் ஐக்கியம் என்பவற்றின் கொள்கையில் உறுதியாக இருக்கும் கிழக்கு மக்கள் ஐக்கிய முன்னணி கிழக்கு மாகானத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடும் என்ற தீர்மானத்தை கிழக்கு மாகாணத்தில் வாழும் பல புத்திஜீவிகள் கல்விமான்கள் பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் நாம் தீமானித்திருக்கின்றோம் என்பதனை கிழக்கு மாகாண மக்களுக்கு அறியத்தருகிண்றோம்
 
எமது தேர்தல் சம்பந்தமான மக்கள் கருத்துக்களைப்பெறும் மக்களுடனான கலந்துரையாடல்கள் இன்னும் ஒரு சில தினங்களி ஆரம்பிக்கப்படும் என்பதையும் அறியத்தருகிண்றோம்.

எம்.தேவகுமார்
அமைப்பு நிர்வாக செயலாளர்
கிழக்கு மக்கள் ஐக்கிய முன்னணி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com