Monday, February 15, 2010

கறுப்பர்கள், ஆசியர்களுக்கான தடையை நீக்கியது இங்கிலாந்து கட்சி

இங்கிலாந்து நாட்டின் முக்கிய கட்சியான பிரிட்டிஷ் நேஷனல் கட்சி - பிஎன்பி - யில் கறுப்பர்கள் மற்றும் ஆசியர்களும் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎன்பி கட்சியில் இதுவரை வெள்ளையர்கள் மட்டுமே உறுப்பினர்களாக ஆக முடியும் என்ற கொள்கை இருந்து வந்தது. இந்நிலையில் அனைத்து இனத்தவரும் சமம் என்ற சட்டத்தை கட்சி உறுப்பினர்கள் நியமன விடயத்திலும் கடைபிடிக்குமாறு, நீதிமன்றம் அண்மையில் பிஎன்பி கட்சியை அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி தனது கட்சி உறுப்பினர் சேர்ப்பு கொள்கையில் மாற்றம் செய்துள்ள பிஎன்பி, இதுநாள் வரை கறுப்பர்கள் மற்றும் ஆசியர்களுக்கு இருந்துவந்த தடை நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இனிமேல் அவர்களும் தங்கள் கட்சியில் உறுப்பினராக ஆகலாம் என்றும், அதற்கேற்ப கட்சியின் சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கட்சியின் தலைவர் நிக் கிரிஃபின் தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  February 15, 2010 at 10:01 PM  

I wonder why British National party took such a long time to come to a favourable decision regarding the blacks to join their party or PLP,
whereas they say they give due respect to human values and democratic values.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com