Thursday, February 4, 2010

சுதந்திரம் ஒவ்வொரு உயிரினமும் எதிர்பார்க்கும் நியாயதர்மம் -பிரதமர்-

“சுதந்திரம்” என்பது ஒவ்வொரு உயிரினமும் எதிர்பார்க்கும் நியாய தர்மமாகும். அவ்வாறே ஜனநாய கத்திற்கு மதிப்பளிக்கும் சமூக மொன்றிலே, இருக்க வேண்டிய அடிப்படை இயல்பாகும்” என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்தார். சுதந்திர தினம் தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியதாவது,

பெளத்த நற்குணங்களின் மூலம் வளர்க்கப்பட்ட இலங்கையர்கள் தமது சுதந்திரத்தைப் போன்றே மற்றையவர்களது சுதந்திரத்தையும் மதிக்கும் சிறந்த சமூகத்தினர்.

மனிதத்துவத்திற்கு எதிரான மனிதத் தன்மையற்ற மனிதர்களது செயற்பாடுகள் முழு மனித சமூகத் தினதும் சுதந்திரத்தை இல்லாது செய்வதற்கு காரணமாக அமைகின்றது. அனைவருக்கும் சுதந்திரத்தின் பெறுமதி விளங்குவது அதை அனுபவிக்கும் போதன்றி சுதந்திரம் இல்லாதுபோன சந்தர்ப்பத்திலாகும்.

வரலாற்றிலே இலங்கையர்களுக்கு சுதந்திரம் இல்லாதுபோன காலகட்டங்கள் இருந்து வந்துள்ளமை பற்றி கடந்த கால வரலாற்றிலே காணப்படுகின்றன. எனினும், அவற்றினை கட்டுப்படுத்து வதற்கான பலமிக்க யுக புருஷர்கள் மக்களிலிருந்தே உருவாகினர்.

சுதந்திரம் என்பதனை வார்த்தைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஒரு காலத்தினையும் நாம் கடந்து வந்துள்ளோம். அந்த சுதந்திரம் தொலைந்து போயிருந்த கசப்பான காலகட்டத்திலே நாட்டு மக்களுக்கு எதிர்கால எதிர்பார்ப்பின்றி சுதந்திரத்தை வேண்டியவர்களாக வாழ வேண்டியேற்பட்டது.

எனினும், 30 வருடகாலம் அனுபவித்து வந்த பயங்கரமான கால கட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும், சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதற்கு தமது உயிரையும் அர்ப்பணித்த வீரர்கள் நாட்டிற்கு அரிதாக இருக்கவில்லை.

1948 ம் ஆண்டிலே பெற்றுக் கொண்ட சுதந்திரமானது 1972 ம் ஆண்டிலே மிகவும் பயன்வாய்ந்ததாக மாறியது. 2009 ஆம் ஆண்டிலே அது மேலும் பூரண சுதந்திரமாக நாட்டிலே வேரூன்றியது.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவுகளின் மூலம் இது மேலும் பிரதிபலிக்கப்படுகின்றது. இலங்கை நாட்டு மக்கள் அனைவரும் இதன்போது தமது ஜனநாயக உரிமையினை சுதந்திரமாக வெளிப்படுத்தினர்.

பெற்றுக் கொண்ட அந்த சுதந்திரத்தை சுதந்திரமாக அனுபவிக்கும் அதே நேரம் சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கு வதற்காக சுதந்திர தினத்தை நினைவுகூரும் அபிமானமிக்க தினத்திலே அனைவரும் தாய் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக ஒன்றிணைவர் என்பதே எனது எதிர் பார்ப்பாகும். இவ்வாறு பிரதமர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com