Tuesday, February 2, 2010

விவாகரத்து கேட்டு 12 வயது சிறுமி வழக்கு

சௌதி அரேபியாவில், 12 வயது சிறுமி ஒருவர், அவரது 80 வயது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கு, தீர்ப்புக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, அவர் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளார்.

சுமார் 22,000 டாலர்கள் பணத்துக்காக, இந்த திருமணத்தை ஏற்பாடு செய்த தனது தந்தையை மீற விரும்பவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் கூறியதாக, சௌதி அரேபியாவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

குழந்தைத் திருமணங்கள் மிகவும் அதிகரித்து வரும் அளவில் சர்ச்சைக்குரியதாக மாறிவரும் சௌதி அரேபியாவில், இந்த வழக்கு குறிப்பிடத்தக்க அளவு கவனத்தை ஈர்த்துள்ளது.

6 comments :

aaa February 2, 2010 at 8:32 PM  

முஸ்லிம்களை விமர்சிக்கும் சில விசமிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கட்டு கதைகளை தாங்களும் மீள பிரசுரித்துல்லீர்களே இச்செய்தி சவுதி அராசங்கத்தினாலோ அல்லது அந்நாட்டு ஊடகங்களினாலோ பிரசுரிக்க பட்டிருந்தால் அதனை ஆதாரமாக சேர்த்து வெளியிட்டிருந்தால் அதன் உண்மை தன்மையை உணர முடியும்.

Anonymous ,  February 2, 2010 at 9:40 PM  

http://www.allheadlinenews.com/articles/7017588077?Saudi%20Girl,%2012,%20Married%20Off%20To%2080-Year-Old%20Man

musamil ,  February 2, 2010 at 9:46 PM  

Saudi Girl, 12, Married Off To 80-Year-Old Man

January 21, 2010 12:48 p.m. EST
Topics: Social Issues, World, Crime, Law and Justice

The Media Line Staff
Buraidah, Saudi Arabia (TML) - Saudi women's rights advocates are outraged after a 12-year-old girl was sold by her father into marriage with an 80-year-old man.


A Saudi father, whose name has not been released, sold his 12-year-old daughter to his 80-year old cousin for the equivalent of $22,600. The elderly man, who lives in the city of Buraidah, stands accused of raping the girl after the wedding. He has previously married three other young girls.

"She was raped and they took her to the hospital after the wedding night," Wajiha Al-Huwaidar, a Saudi journalist who has been banned from reporting by the government told The Media Line. "Usually when the girl is very young, the authorities tell the husband not to touch her until after puberty. When he was interviewed, the guy just said she was old enough and he didn't know she would get hurt."

The girl, already in the custody of the elderly man, was reported to have shouted "I don't want him, save me!" when contacted by phone by a journalist from the Al Riyadh, a local newspaper in the Saudi capital.

The girl's mother, who had objected strongly to the marriage, took the case to local media after her lawyer's efforts to get it legally annulled failed.

After the case was publicized, the public prosecutor of Al-Qassim Province is said to have set up a special committee to look into the case.

ஆதி, ,  February 2, 2010 at 9:49 PM  

நியாஸ்: உங்களுக்கு இஸ்லாத்தில் உள்ள பற்று தொடரவேண்டும். ஆனால் தவறுகள் திருத்தப்படவேண்டுமாயின் உண்மைகளுக்கு வெளிச்சம் வேண்டுமல்லவா?

aaa February 2, 2010 at 10:29 PM  

இஸ்லாத்தில் உள்ள பற்றுஎன்பதைக்காட்டிலும் உண்மை உண்மையாகவே வெளிவர வேண்டுமென்று விரும்புகிறேன். அதனால்தான் "முஸ்லிம்களை விமர்சிக்கும் சில விசமிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கட்டு கதைகள் என்று குறிப்பிட்டிருந்தேன்."
அதற்கு முடிந்தால் சரியான ஆதாரத்தை வைத்து நிருபித்தால் அச்செய்தியை ஏற்றுகொள்ள தயாராகவே உள்ளேன் அதை விடுத்து www.allheadlinenews.com என்கிற இஸ்லாத்தின் வளர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாத,அதற்கு எப்போதும் அவப்பெயரை உண்டுபன்ன நினைக்கும் மேற்கத்தைய சக்திகளின் ஆதரவு ஊடகங்களை ஆதாரமாக வைப்பது எந்த வகையில் நியாயம்?

Unknown February 3, 2010 at 9:49 AM  

அன்பிற்குரிய சகோதரர் ஆதீ அவர்களே!
நீங்கள் குறிப்பிடுவது போன்று "தவறுகள் திருத்தப்படவேண்டுமாயின் உண்மைகளுக்கு வெளிச்சம் வேண்டும்" என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்.
புனிதமான இஸ்லாத்தின் வளர்ச்சியினை தாங்கிக்கொள்ள முடியாத இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான சக்திகள் இவ்வாறான விடயங்களை இன்று மட்டுமல்ல காலாகாலமாக இணையத்தளங்களினூடாக வெளியிட்டு, இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் பற்றி, பிற சமூகத்தவர்கள் மத்தியில் தப்பான, பொய்யான அபிப்பிராயத்தை உண்டாக்கும் நோக்கில் செயற்ற்பட்டுக்கொண்டிருக்கிரார்கள். உண்மையாகவே, இன்று இஸ்லாமிய மார்க்கம் உலகளாவிய ரீதியிலே வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இஸ்லாத்தின் கொள்கைகளும், விளக்கங்களும் இன்று சர்வதேச ரீதியாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்களால் தெளிவுபடுத்தப்படுவதனால், இஸ்லாத்தை ஏற்க விரும்புகின்ற பிற மத சமூகத்தவர்கள் மத்தியில் இவ்வாறான தப்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்டுவதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதை தடுக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். இஸ்லாம் பற்றிய பொய்யான, தவறான கருத்துக்களை கக்குவதற்காக வேண்டியே இன்று கூடுதலான இணையத்தளங்கள் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சகோதரரே! இஸ்லாமிய மார்க்கம் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதற்காகவே எனது கருத்துக்கள் அமைந்தனவே தவிர, விவாதிப்பதற்காக அல்ல.
நன்றி.

முஹம்மது நியாஸ்
- கட்டார் -

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com