Tuesday, January 12, 2010

ரிஎன்ஏ யுடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லை. நஸ்டஈடு கோரி நீதிமன்று செல்கின்றார் ரவி.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிர்கட்சிளின் கூட்டணிக்குமிடையே ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தெரண தொலைக்காட்சியின் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 8.00 செய்தியில் தெரிவிக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நீதிமன்றம் செல்கின்றார்.

ரீட் அவனியூவில் அமைந்துள்ள ஜெனரல் பொன்சேகாவின் தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்யப்படவில்லை எனவும், அவ்வாறானதோர் ஒப்பந்தத்திற்கான எண்ணப்பாடு இல்லை எனவும் தெரிவித்த அவர் குறிப்பிட்ட செய்தி இலங்கையில் மேலும் இனவாதத்தை தூண்டும் எண்ணத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளாதாகவும், எதிர்காலத்தில் நாட்டில் இனவாதத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

தெரண தொலைக்காட்சி , விமல் விரவன்ச , மற்றும் சிலரிடம் 1000 மில்லியின் ரூபா நஸ்டஈடு கேட்டு தனது வக்கீல் ஊடாக கடிதம் அனுப்பபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்; இதனுடன் தொடர்படைய மேலும் சிலருக்கு நேற்று பிற்கபல் 4.30 மணிக்கு முன்னர் நஸ்டஈடு கோரும் கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறயிருந்தார்.

பிறிதொரு அரச ஊடகத்தித்திடம் நஸ்டஈடுகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்டபோது, பணம் கைக்கு கிடைக்கும் வரைக்கும் காத்திருப்பதாகவும், கிடைத்தவுடன் அவ்வளவு பணமும் இங்கு குழுமியிருக்கும் ஊடகவியளாளர்களிடைய பகிர்ந்தளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com