Thursday, January 21, 2010

டென்மார்க் நாட்டில் பெண்கள் பர்தா அணிய தடை

டென்மார்க் நாட்டு பத்திரிகை ஒன்று முகமதுநபி படத்தை வெளியிட்டதால் சர்ச்சை எழுந்தது. இப்போது அங்கு முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை விதித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர். டென்மார்க் நாட்டில் மொத்த மக்கள் தொக 55 லட்சம். இதில் 1.9 சதவீதம் பேர் முஸ்லிம்கள். 1 லட்சம் முஸ்லிம் பெண்கள் உள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் பர்தா அணியும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

அவர்கள் பர்தா அணிய தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுபற்றி ஆராய அரசு குழு ஒன்றை அமைத்தது. அவர்கள் பர்தா அணிய தடை விதிக்கலாம் என்று சிபாரிசு செய்தனர்.

இதையடுத்து அந்த நாட்டு பிரதமர் ரசும்சென் டென்மார்க்கில் பெண்கள் பர்தா அணியக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

டென்மார்க் வெளிப்படையான ஜனநாயக நாடு. இங்கு யார்-யாரை சந்தித்தாலும் அவர்களுக்குள் பேசிக்கொள்ளலாம். எனவே யாரும் முகத்தை மறைத்து செல்வதற்கு அனுமதிக்க முடியாது. எனவேதான் பர்தா அணிய தடை விதிக்கப்படுகிறது என்று கூறினார்.
இதேபோல பிரான்ஸ் நாட்டில் பஸ் மற்றும் ரெயில்கள், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வோர் பர்தா அணியக் கூடாது என்று தடை விதிக்க திட்டமிட்டு உள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com