Thursday, January 21, 2010

இராணுவ ஆட்சி உருவாகும் அபாயம். அனுர குமார

ஐக்கிய மக்கள் முன்னணி அரசாங்கம், அதன் வேட்பாளர் எதிர்வரும் தேர்தலில் தோல்விகண்டால் இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்லக்கூடிய அறிகுறிகள் தென்படுவதாக ஜெனரல் பொன்சேகாவின் இணை ஊடகப் பேச்சாளரும் ஜேவிபி யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், அரசாங்கம் சுயலாபங்களுக்காக இராணுவ அதிகாரிகளுடாக இலத்திரனியல் ஊடகங்களுக்கு அறிக்கைகளை அனுப்புவது இவ்விடயத்தில் தமக்குள்ள சந்தேகத்தை நிருபித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அரசொன்று தோல்வியை தழுவுகின்றபோது இராணுவ பலம்கொண்டு தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு முனைவது உலகில் பல பாகங்களிலும் நிகழ்ந்துள்ளது என தெரிவித்த அவர் அவ்வாறானதோர் நிகழ்வு எமது நாட்டில் இடம்பெற இடமளிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com