ஊடகவியலாளரை கண்டுபிடிக்க விசேட பொலிஸ் குழுவாம்.

நேற்று முன்தினம் இரவு தனது காரியாலயத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது ஹோமாகம பிரதேசத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்நாலியகொடவினை கண்டுடிப்பதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக லங்காஈநியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் சந்தருவன் சேனாகீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எக்நாலியகொடவின் பிரத்தியேக தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றினால் பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment