Monday, January 25, 2010

எதியோபிய விமானம் விபத்து: விமானத்தில் பயணித்த 92 பேரும் பலி உறவினர்கள் கதறல்

85 பயணிகளுடன் சென்ற எதியோபிய விமானம் விபத்துக்குள்ளானது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து எதியோபியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் இன்று காலையில் எதியோபிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்டு சென்ற 45 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்துக்கும், விமான கட்டுப்பாட்டு அறையுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் மத்தியதரைகடல் மேல் பறந்த போது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. விமானத்தில் இருந்தவர்களில் 54 பேர் லெபனானை சேர்ந்தவர்கள், எஞ்சியவர்களில் பெரும்பாலோனார் 22 பேர் எதியேபியாவை சேர்ந்தவர்கள். ஒருவர் ஈராக்கியர், பிரான்ஸ், சிரியா நாட்டை சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர். இவர்களை தவிர விமான பைலட்டு உட்பட சிப்பந்திகள் 7 பேர். மொத்தம் 92 பேர் விமானத்தில் இருந்தனர்.

விமானம் எரிந்து விழுந்தது : விமானம் நடுவானில் திடீரென தீ பிடித்து எரிந்து விழுந்ததாக ,மத்திய தரைக்கடல் பகுதி கடலோர மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். விமான விபத்து குறித்த செய்தி அறிந்தவுடன் லெபனான் நாட்டு அதிகாரிகள் ரபீக் ஹரிரி ஏர்போர்ட்டுக்கு விரைந்துள்ளனர். இந்த ஏர்போர்ட்டில் இருந்து தான் அந்த விமானம் புறப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மீட்பு பணிகள் : மீட்பு பணிகளில் லெபனான் நாட்டின் ராணுவம், கடற்படை மற்றும் ஐ.நா., பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. விமான விபத்து செய்தியறிந்து விமான நிலையத்தில் குவிந்த பயணிகள் கதறி அழுதனர். இதவரை 23 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com